அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியின் முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா மறைவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியின் முதல் ஆசான் திரு.ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா மறைவு! 2007 ஆம் ஆண்டு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பள்ளியை முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தார். பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளிக்க யாரும் ஆசிரியராகப் போகக்கூடாது என்று பார்ப்பன அர்ச்சகர்கள் தமது சங்கத்தில் முடிவு செய்து புறக்கணித்தனர்.

பள்ளியைத் தொடங்கியபோதிலும் ஆசிரியர் கிடைக்காமல் தவித்த நிலையில், மறைந்த ஐயா அவர்கள்தான் ஆசிரியராகப் பணியாற்ற முன்வந்தார்.

அங்குசம் இதழ்..

 அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா
அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா

சேலம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஐயா ஸ்ரீ ராமகிருஷ்ணா ஜீவா அவர்கள் பிறப்பால் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர். கர்நாடகா மாநிலத்தில் ஒரு ஆசிரமத்தில் ஆகம பயிற்சி நடத்தி வந்தார். சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கருத்தைக் கொண்ட இவர், கலைஞர் தொடங்கிய ஆகம பயிற்சிப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்ற மனமுவந்து முன்வந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ருத்ரம், சமகம், ஸ்ரீசூக்தம், புருஷசூக்தம் உள்ளிட்ட சமஸ்கிருத மந்திரங்கள், பூஜை முறைகள் அனைத்தையும் எங்களுக்கு முறையாகப் பயிற்றுவித்தார். சமஸ்கிருத மொழிப்பயிற்சி இல்லாத எங்களுக்கு உரிய உச்சரிப்புடன் மந்திரங்களைப் பயிற்றுவிப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்தினார்.

திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்ட போது, பள்ளியையே இழுத்து மூடவேண்டும் என்று பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தடுக்க முடியாத காரணத்தால் பள்ளியை முடக்குவதற்கு பலவிதமாகத் தொல்லை கொடுத்தனர்.

அர்ச்சகர் பள்ளி மாணவர்களோடு ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா
அர்ச்சகர் பள்ளி மாணவர்களோடு ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா

பிறப்பால் பார்ப்பனராக இருந்தும் தங்கள் சாதிக்கு துரோகம் செய்வதாக எங்கள் ஆசிரியரை வசை பாடினர். அவதூறு செய்தனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ் சார்ந்த இந்து அமைப்பினருடன் சேர்ந்து கொண்டு அவரைத் தாக்கினர். 2007-08 ஆம் ஆண்டுகளில் இத்தகைய தாக்குதல்கள் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஊடகங்களிலும் இந்த செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய பிரச்சினைகள் காரணமாக, எப்பொழுதும் அவர் அறையில் 10 மாணவர்கள் பாதுகாப்புக்காகத் தங்கியிருந்தோம்.

அவர் கடைவீதிக்குச் சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும் பாதுகாப்புக்காக கூடவே சென்றிருக்கிறோம். இத்தனை தடைகளையும் மீறித்தான் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக பல்வேறு ஆலயங்களில் இன்று நியமிக்கப்பட்டிருக்கிறோம்.

 அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா
அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஐயா அவர்களால் பயிற்றுவிக்கப்ப்ட்ட எல்லா சாதிகளிலும் பிறந்த இந்து மாணவர்கள் இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கோயில்களிலும் அர்ச்சகர்களாக மிகச்சிறப்பாகப் பணியாற்றுகின்றனர். குடமுழுக்கு முதல் பூஜை முறைகள் வரையிலான அனைத்தையும் பார்ப்பன அர்ச்சகர்களே கண்டு வியக்கும் வண்ணம் செய்து வருகின்றனர். அர்ச்சகர் பணிக்கு பிறப்பு ஒரு தகுதியல்ல என்பதை நாங்கள் நடைமுறையில் நிரூபித்து வருகிறோமென்றால், அந்தப் பெருமை எங்கள் ஆசிரியர் ஐயா ஸ்ரீ ராமகிருஷ்ணா ஜீவா அவர்களையே சாரும்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி இன்றும் இயங்கி வருகின்றது. அந்தப் பள்ளியின் முதல் ஆசிரியரான சிவத்திரு ஐயா ஸ்ரீ ராமகிருஷ்ண ஜீவா அவர்கள் முதுமை காரணமாக உடல் நலம் குன்றி இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

 அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா
அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம் தலைவர் வா.ரங்கநாதன்,   சார்பில் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்  

அர்ச்சகர் பயிற்சி பள்ளி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார் சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக இருந்தார்கள் ஆசிரியர் கிடைக்காமல் தவித்தோம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பார்ப்பனர்கள் இதை சொல்லித் தரக் கூடாது அவர்கள் சங்கத்தில் முடிவு செய்து தீர்மானம் செய்துள்ளதாக தகவல் அப்போது வெளியானது அதனால் யாரும் வரவில்லை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அரசராகலாம் என்ற திட்டத்தின் மூலமாக அர்ச்சகர் பயிற்சி நிலையங்கள் நடைபெற்று வருகின்றன அந்த அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் 2007 2008 ஆம் ஆண்டு ஆகம ஆசிரியராக பணியாற்றிய சிவத்திரு ஐயா ஸ்ரீ ராமகிருஷ்ண ஜீவா அவர்கள் உடல் நலம் குன்று இருந்ததால் 14.07.2024 இன்று இறைவனடி சேர்ந்தார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் மிகவும் மாணவர்களுக்கு ஒரு பேரிழப்பு என்பது வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா - மறைவு
அர்ச்சர் பள்ளி முதல் ஆசான் ஸ்ரீராமகிருஷ்ண ஜீவா – மறைவு

அய்யாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு ராசிபுரம் கடைவீதியில் இருந்து நடைபெறுகிறது. மாணவர்கள் அனைவரும் அய்யாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுஇறுதி அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.  அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவுத்திட்டத்தை நனவாக்குவதற்குப் பாடுபட்ட, ஐயா ஸ்ரீ ராமகிருஷ்ண ஜீவா அவர்களை நினைவுகூர்ந்து கவுரவிக்க வேண்டுமாறு தமிழக அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்குசம் – செய்தி குழு 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.