குழாய் அடி சண்டை போடும் திமுக, பாஜக கட்சிகள் ! – முன்னாள் அமைச்சர் உதயகுமார் …
கல்விக்கு நிதி வாங்க முடிவில்லை என்றால் திமுக மற்றும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரை முதல்வர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய சொல்வாரா? – முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மெயின் ரோடு, அண்ணா பஸ் நிலையம் பகுதிகளில் அதிமுக அரசின் சாதனை விளக்க தொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். மேலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில்,

எம்.ஜூ.ஆர், ஜெயலலிதா அவா்களின் மறு வடிவம் எடப்பாடி பழனிச்சாமி. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக போராடியது, எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவினை நனவாக்கும் வகையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்த சமூக நீதி காவலர்.
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படவில்லை.
விளம்பர வெளிச்சத்தில் விழாக்களை நடத்தும் முதல் மு.க ஸ்டாலின் எங்கள் ஆட்சி சாதனையை அவர் சாதனையாக கூறுகிறார். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
என் ஏரியா பக்கத்தில் வந்து பாரு தொட்டுப்பார் என்று இன்றைக்கு குழாய்டி சண்டை போடுகிறார்கள் (திமுக -பாஜக)
மாணவர்களுக்கு கல்வி நிதி பெற்று தர திமுகவிற்கு முடியவில்லை. கல்விக்கு நிதி வாங்கி கொடுங்கள் என்றால் அண்ணா சாலை பக்கம் வந்து பாருங்கள் தொட்டுப் பாருங்கள். வீட்லதான் இருக்கிறோம் என்று கூறுகின்றனர். கல்விக்கு நிதி வாங்க முடியாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கல்விக்கு நிதி வாங்க சொன்னால் வீட்டிற்கு முன் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு கோலப் போட்டி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மெட்ரோ ரயில், கல்வி திட்டத்திற்கு திமுக அரசால் நிதி வாங்க முடியவில்லை.
நேரில் போய் போராடி வாங்க வேண்டிய நிதியை நேற்றுதான் முதல்வர் அவர்கள் கடிதம் மூலம் எழுதிக் கொண்டிருக்கிறார்.கல்விக்கு நீதி பெற்று தர முடியாத முக ஸ்டால திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். மக்களிடம் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இன்னும் எத்தனை நாடகங்களை இந்த திமுக மக்களிடையே அரங்கேற்ற போகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீட் தேர்வு ரகசியம் எங்களது பாக்கெட்டில் இருப்பதாக கூறினார்கள். தங்கமலை ரகசியமாக வைத்திருக்கும் அந்த ரகசியத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று நாங்கள் பலமுறை கேட்டு விட்டோம் . அதனை வெளியிடுவும் இல்லை.
பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை இன்றைக்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தாத நிலையிலும் இப்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு மின்கட்டனை ஏத்தாதே என்று போராடினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மூன்றாண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்திய ஒரே முதல்வர் மு க ஸ்டாலின் தான்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்தின் நிலை குறித்து மூன்று மணி நேரம் பேசியதை மூன்று நிமிஷமாக தருகின்றனர். மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் மூன்று மணி நேரம் பேசியதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட தைரியம் இருக்கிறதா?
தமிழகத்தில் மக்களாட்சி மறைந்து மன்னராட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழகத்திற்கு பேராபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்களாட்சி மலர அதிமுக அரசின் சாதனை துண்டு பிரசுரங்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.
தமிழக மக்களை முதல்வர் மு க ஸ்டாலின் குறைத்து மதிப்பிட்டுள்ளார் வாரிசு அரசியல்.. மன்னர் ஆட்சியை நீங்கள் விதைத்து வைத்துள்ளீர்கள். இதற்கு முடிவு கட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு மகுடம் சூட்ட தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
இன்றைக்கு திமுக அரசியல் ஒரு சார்ஜிட் கூட தாக்கல் செய்ய தெரியவில்லை ஆகையால் தான் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளனர். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். கடன் சுமையில் தமிழக முதல் மாநிலம் ஆனால் திட்டங்கள் இல்லை. விளம்பர வெளிச்சத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.
— மணிபாரதி.