அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரமாக காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் !

மதுரை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரம்  காத்திருந்து வரவேற்ற  அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜி, ஆர்.பி . உதயகுமார் !

Sri Kumaran Mini HAll Trichy

மதுரைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக (ஜூன் 8,9)-ம் தேதிகளில் வருகை புரிந்த அமித்ஷாவை வரவேற்க அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே. ராஜி, ஆர். பி. உதயகுமார் மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் வரை  காத்திருந்தனர்.

Amit Shah - அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
Amit Shah – அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மதுரையில் பாஜக நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூன் 8-ல்)  நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து ( ஜூன்- 7 ) இரவு 7:30  மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது.

இதை எடுத்து, அமித்ஷாவை வரவேற்க தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக அமைப்பு செயலாளர்கள் கேசவ விநாயகம், பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜி ஆர்.பி. உதயகுமார் ஆதியோரும் வந்திருந்தனர்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்ட அரங்க பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு படை வசம் அரங்கத்தை ஒப்படைத்த பிறகே டெல்லியில் இருந்து

Flats in Trichy for Sale

அமித் ஷா புறப்படுவதாக இருந்தது. இதனால் தாமதமாக புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு தான் அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் ஆணையர் லோகநாதன், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளை அமித்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினார். பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அமித்ஷாவை  வரவேற்றனர். பின்னர், அமித்ஷா விமான நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

இந்த நிலையில்… மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்மையில் அவரது கார், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்றது. ஆனால் தம்மை பாகிஸ்தான் கொள்ள சதி செய்கிறது, குல்லா வைத்தவர், தாடி வைத்தவர் காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார் என பச்சை பொய் பேசியது சிசிடிவி காட்சி மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதுரைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அமித்ஷா செல்லும் வழியில் மதுரை ஆதினம் மடம் அமைந்துள்ளது. பொதுவாக ஆதீனத்தை மடத்துக்குள் வந்து தான் தலைவர்கள் சந்திப்பது வழக்கம்.

ஆனால் வழக்கத்தை மீறி, மதுரை ஆதீனம் தமது மடத்தின் வாசலில் அமித்ஷாவுக்காக காத்திருந்தார். அமித்ஷா வாகனம் எதிரே வந்தபோது நடுத்தெருவில் நின்றபடியே அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம், தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க அமித்ஷாவிடம் மனு கொடுத்தேன் என்றார். மதுரை ஆதினம் நடுத்தெருவில் ஒன்று அரசியல் தலைவர்களை வரவேற்பது மரபுதானா? என்கிற சர்ச்சை சமூக வலைத்தளங்களில் வெடித்திருக்கிறது

– மகிழன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.