நாலு அரசு அதிகாரிகளும் ஒரு அரசு வழக்குரைஞரும் போதும், அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு !

0

சமூக காடுகள் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ப்யூஷ் மனூஷ் தன்னுடைய தோட்டத்தில் ஸ்டேன் சுவாமி சிலையை நிறுவ முற்படுகிறார். ப்யூஷ் அவருக்கு சொந்தமான இடத்தில் எந்த சிலையையும் வைக்கலாம்; எவர் அனுமதியும் தேவையில்லை. ஆனாலும் தாசிதார் தடுக்கிறார்.

இத்தனைக்கும் ப்யூஷ் மானூஷ் தினம் தினம் சங்கிகளை எதிர்த்து சமூக ஊடகம் எங்கும் களமாடிக் கொண்டிருப்பவர். ஸ்டேன் சுவாமி சிலையை ஏன் வைக்கக்கூடாது என்பதற்கு திராவிட மாடல் அரசு நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கம்தான் சிறப்பு.

‘ஸ்டேன்சுவாமி நக்சல்பாரிகளுடனும் மாவோஸ்ட்டுகளிடமும் தொடர்பு கொண்டவராம்; சட்ட ஒழுங்கு கெடுமாம்’ அடேய்!

அடுத்த காரணம் மேலும் சிறப்பு, ‘தருமபுரி சென்ஸிட்டிவ் பகுதி, சமீபத்தில் பழங்குடி கிராமங்கள் அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்க்கும் சமூக விரோதிகளுக்கான சொர்க்கபுரியாக மாறி வருகிறதாம்’ தமிழக சட்ட ஒழுங்கு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறதா?

விட்டிருந்தால், அரசு வழக்குரைஞர் விடுதலை 2 பட டிரயிலரை ஆதாரமாகக் காட்டியிருப்பார் போல.மத்திய மஹராஷ்டிர அரசுகளாவது, ஸ்டேன்சுவாமியை சிறையில் தான் கொன்றது. திராவிட மாடல் அரசு நீதிமன்றத்திலேயே கொல்ல முயற்சி செய்திருக்கிறது.

‘சேச்சே, குற்றம் நிரூபிக்கப்படாதவகையில் அவரை எப்படி நக்சல் தொடர்பிலிருப்பவர் என்பது’ என்று நீதிபதி பெருந்தன்மையாக ஸ்டேன்சுவாமி சிலை வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார்.

அரசின் கொள்கை/ நடவடிக்கையை எதிர்ப்பது தேச விரோத செயலுமல்ல. அவர் ஆனானப்பட்ட சாருமஜும்தாராகவே இருந்தாலும் அவர் சிலையை தனியார் இடத்தில் வைக்கக் கூடாது என்பதுமில்லை.

எடப்பாடி – விஜய் – திருமா கூட்டணி எல்லாம் தேவையில்லை; நாலு அரசு அதிகாரிகளும் ஒரு அரசு வழக்குரைஞரும் போதும், அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு !

Prabhu Rajadurai – வழக்கறிஞர்

 

Leave A Reply

Your email address will not be published.