போலியான ஆவணங்களை தயார் செய்து ”பஞ்சமி நிலங்களில்” பல கோடி மோசடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பஞ்சமி நிலங்களை போலியான ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்.

தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போலியான ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை போலியான ஆவணங்களை உற்பத்தி செய்து பல கோடி ரூபாய்க்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மோசடியில் ஈடுபட்டு வரும்  முல்லைநகரைச் சேர்ந்த தங்கத்துரை, அம்மச்சியாபுரத்தை சேர்ந்த இரும்பொறை செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் மீதும், மோசடி செயலுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் தேனி காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

குறிப்பாக தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்வே எண் 196/1 உள்ள நிலத்தின் மீது எந்த வித பரிவர்த்தனைகளும் ஏற்படுத்தக்கூடாது என தேனி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இருக்கிறது.

தற்போது சட்ட விதிகளை மீறி போலி ஆவணம் மூலம் பஞ்சமி நிலத்திற்குள்கட்டிடம் கட்டியுள்ளனர்.

இதில் கண்டமனூர் பால்போஸ் என்பவருக்கு 5 சென்ட் நிலம் எழுதி கொடுத்து ரூ 10 லட்சமும், கோவில்பட்டி ராஜாங்கம் என்பவருக்கு 101/2 சென்ட்க்கு 20 லட்சமும், தேனி பவுன்ராஜ் க்கு15 சென்ட்க்கு ரூ.30 லட்சமும்ப,அல்லிநகரம் டாக்டர் ராஜேந்திரன் என்பவருக்கு 30 சென்ட்டுகு ரூ. 30 லட்சமும், ஆசை சிவக்குமார் என்பவருக்கு 30- சென்ட் பத்திரம் எழுதி கொடுத்து ரூ40 லட்சமும், பழனிசெட்டிபட்டி பொறியாளர் ஒருவருக்கு 10 செண்ட் நிலத்திற்கு ரூ 15 லட்சமும் , ஊஞ்சாம்பட்டி கிராமம்சர்வே எண் 1382. 2 ஏக்கர் வரை மோசடிவிற்பனை செய்தும்  சர்வே எண் 1377/1 ல் சுமார் 14 ஏக்கர் பஞ்சமி நிலத்தை போலியான ஆவணம் தயாரித்து மோசடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதேபோல் கொடுவிலார்பட்டி கிராமம் அரசு தரிசு நிலத்திற்கு போலியான ஆவணம் தயாரித்து டாக்டர் ராஜேந்திரனுக்கு 50 சென்ட் நிலத்திற்கு ரூ50 லட்சம்பெற்று மோசடி. வீரபாண்டி கிராம புல எண் 61, 62, பழனி செட்டி பட்டியிலுள்ள பஞ்சமி நிலத்தை அப்பாவி மக்களிடமிருந்து மிரட்டி போலி ஆவணம் மூலம் பல லட்சம் ரூபாய் வரை மேற்படி கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், தேனி
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், தேனி

இதேபோல தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து செந்தில்குமார் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் மீது தேவதானப் பட்டிபோலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பஞ்சமி நிலத்தை போலியாக பத்திரம் போட்டு தனியார் கார் செட் அமைத்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் தற்காப்புக்கு ஏதாவது ஒரு கட்சியின் பெயர் அல்லது ஏதாவது ஒரு அமைப்பின் பெயரையோ பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்து தொடர்ச்சியான பல்வேறு குற்றச்செயல்களிலும். பல்வேறு பகுதிகளில் உள்ள அப்பாவி மக்களிடம் உள்ள பஞ்சமி நிலங்களை குறி வைத்து இந்த கும்பல் மோசடியான ஆவணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து நிலத்தின் உரிமையாளரையும் நிலம் வாங்குபவர்களையும் மோசடி செய்து வருவதை தடுக்க வலியுறுத்தியும் மூன்று பேர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தேனி காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க திரண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.