அங்குசம் சேனலில் இணைய

ஜல் ஜீவன் திட்ட தற்காலிக பணியாளா்களுக்கு சம்பளம் வழங்காமல் மோசடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக முழுவதும், ஜல் ஜீவன் திட்டத்தில், வேதியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்கள், சம்பளம் வழங்காமல் மோசடி!

தமிழக முழுவதும், பொது சுகாதாரம், நீர்பகுப்பாய்வகம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர்-ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆதரவுடன்-வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் 114 பேர் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தற்காலிக பணியாளா்கள்தமிழக முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆதரவுடன் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் தலா ஒரு வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக அந்தந்த மாவட்டங்களில் கடந்த மார்ச் 2025 முதல் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்காலிக பணியாளா்கள்அனைவரும் அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களின் அறிவுரைப்படி மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் பணியில் சேர்ந்தவர். மார்ச் இறுதி வாரத்தில் பணியில் சேர்ந்து பணியாற்றிய 10 நாள்களுக்கு மட்டும் ஊதியம் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மூன்று மாதங்களாக (ஏப்ரல்,மே, ஜூன்) ஊதியம் வழங்கப்படவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.