அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சுட சுட பொறிச்ச குழம்பு சாதம்! – சமையல் குறிப்பு- 49

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! ஒன் பாட் ரெசிபி இன்னைக்கு நாம பார்க்கப் போறது டெய்லி பொரியல் அவியல் கூட்டு வெச்சு போர் அடிக்குதா! வாங்க சீக்கிரமா செய்ற மாதிரி ஒரு டிஷ் பார்க்கலாம். முக்கியமா மழை காலத்துல சுட சுட இந்த பொறிச்ச குழம்பு சாதம் செஞ்சு பாருங்க நல்லா அட்டகாசமா இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

உளுந்து ஒரு ஸ்பூன், மிளகு ஒரு ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், பச்சரிசி ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன், வர மிளகாய் ஆறு, அரை கப் பச்சரிசி, கால் கப் துவரம் பருப்பு, தனியா தூள் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சாம்பார் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் ஒரு கட்டி, எண்ணெய் தேவையான அளவு. காய்கறி கலவை கட் செய்தது (எந்த காயாக இருந்தாலும் சரி).

செய்முறை:-

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒரு கடாயில் உளுந்து, வர மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்த அரிசி பருப்பை குக்கரில் சேர்த்து நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சாம்பார் தூள், மஞ்சத்தூள், பெருங்காயம், கருவேப்பிலை தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து குக்கரில் மூன்று முதல் நான்கு விசில் விட்டு எடுக்கவும்.

பொறிச்ச குழம்பு சாதம்
பொறிச்ச குழம்பு சாதம்

அதன் பின் அரைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்த்து கொதித்த சுடுநீரை ஒரு கப் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு தேவையான கருவேப்பிலை கடுகு உளுந்து தாளிப்பு கொடுத்து இறக்கினால் சூடான சுவையான பொறிச்ச குழம்பு சாதம் சாப்பிட தயார்!

 

—  பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.