விஷப் பாம்புகளுக்கு தோட்டமா !
நம் ஊர்களில் எல்லாம் காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் ஆகியவற்றைத் தோட்டம் வைத்து வளர்க்கப்படுவதை கேள்விப்பட்டு இருப்போம். சில இடங்களில் மீன் பண்ணைகள் இறால் பண்ணைகள் கூட கேள்விப்பட்டிருப்போம் அதை நாம் நேரில் சென்றுகூடப் பார்த்திருப்போம். ஆனால், பாம்புகளுக்கு என்று தோட்டம் வைத்து அவற்றை வளர்ப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் இது போன்ற வித்தியாசமான தோட்டம் வியட்நாமில் இருக்கிறது.
டாங் டாம் (Dong Tam) என்று அழைக்கப்படும் இந்த பண்ணைத் தோட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விஷத்தன்மைக் கொண்ட பாம்புகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பாம்புகளின் விஷத்தைப் பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், பாம்பு கடிக்குப் பயனுள்ள மாற்று மருந்துகளையும் தயாரிக்க இங்கு பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாம்பு தோட்டத்தை, தற்போது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேரில் வந்து ஆர்வமுடன் பார்க்கும் பிரபல சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. அதற்கேற்றார் போல, அங்கு மரம் முழுக்க நிறைந்திருக்கும் பாம்புகளைச் சுற்றுலாப் பயணிகள் காண தகுந்த இடவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.