மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கைவிட வலியுறுத்தியும்… அனைத்து பொதுத்துறை  நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் கொள்கை முடிவிற்கு மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிக்கக் கூடிய வகையில் மத்திய தொழிற்சங்கங்கள் 09.07.2025  பொது வேலைநிறுத்தத்தினை அறிவித்து நடத்தி வருகிறார்கள். அனைத்து கட்சிகளின் தொழிற்சங்கங்களும், பெரும்பாலான  மாநிலங்களும் இணைந்து போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசுக்கு மட்டும் இவ்வளவு ஆவேசமும் போராடுபவர்களுக்கு எதிரான தண்டனை அறிவிப்புகளும் வெளியிட வேண்டிய அவசியம்தான் என்ன?.. அவசியம்தான் என்ன?

Sri Kumaran Mini HAll Trichy

ஒன்றிய அரசு என்று நாம் அழைப்பதால் ஒன்றிய அரசின் ஆதிக்க சக்திகளோடு ஒன்றிணைந்து அறிக்கை விடுகிறார்களோ?.. கேரளம் உள்ளிட்ட மத்திய அரசின் ஆதிக்க உணர்வுகளுக்கு எதிரான மாநில அரசுகளுக்கு இல்லாத கோபம் இவர்களுக்கு மட்டும் ஏன் வர வேண்டும்?

பொது வேலை நிறுத்த கோரிக்கைகள் தான் என்ன என்ன?.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  தொழிற்சங்கங்கள்  போராடுகிறார்கள். 100 ஆண்டுகளாக போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளை நான்கு சட்டத் தொகுப்புகளின் மூலமாக அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளார்கள்.

எட்டு மணிநேர வேலை நேரத்தினை 10 மணி நேரம், 12 மணி நேரம் என கார்ப்பரேட்டுகளின் முடிவுகளுக்கு ஆதரவாக  கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் தொழிலாளர்களின் நலன்களை ஒப்படைத்துள்ளார்கள்.

அஞ்சல் துறை, தொலை தொடர்பு, ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநில அரசின் உரிமைகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு.. அவர்களின் எண்ணப்படி  ஆட்டிப் படைக்க  முனைகிறார்கள்.

மும்மொழித்திட்டத்தினை அமல்படுத்துகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை- 2020 அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆணையிட்டு வருகிறார்கள். ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியினை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்க வேண்டும்?.. என்பதை பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசு அவர்களுக்கு வழிகாட்டு கொள்கை விதிகளை வகுக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறோம்.

சம வேலைக்கு; சம ஊதியம் கோரிக்கையினை  வலியுறுத்துகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையினை முன் வைத்திருக்கிறோம்!

பல்வேறு மாநிலங்கள் இணைந்து இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு  குரல் கொடுத்திருக்கிறார்கள்… கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Flats in Trichy for Sale

வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி இந்தியா முழுவதும் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, AIFETO, AIFUCTO, STFI, இந்திய மாணவர் சங்கம், ஜாக்டோ ஜியோ வில் அங்கம் வகிக்கும் சங்கங்கள் எல்லாம்  இணைந்துதான் போராடுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 8-ஆம் தேதி  ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்களுக்கு “NO WORK; NO PAY.,” என்று அறிவித்துள்ளார்கள். அது நடைமுறை விதி ஆகும்.   இன்று தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு கூட அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது  துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.. என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

பிஜேபி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைக்கும் தமிழ்நாடு அரசின் இந்த ஆவேச நடவடிக்கையினயும் பார்த்தால் ஆதிக்க சக்தி உணர்வில் எங்களுக்கு ஒன்றும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

மத்திய அரசுக்கு எதிரான தொழிலாளர்களின் போர்க்குண உணர்வு, வெறுப்புணர்வு தமிழ்நாடு அரசு மீதும் ஏற்படுவதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் அறிக்கை வாய்ப்பு அளித்துள்ளது என்று எண்ணுகிறோம்!…

இதை இதயத்தில் பதிவு செய்கிறோம்!.. பதிவு செய்கிறோம்!..

இந்தியத் திருநாட்டில் 25 கோடி பேர் இன்றைக்கு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்கள்.. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களின்  உணர்வுகளில் போராட்ட உணர்வு கொந்தளித்துக் கொண்டே இருக்கும். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து களத்தில் நிற்போம்…

தோற்றதில்லை!.. தோற்றதில்லை… தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் எப்போதும் தோற்றதில்லை!.. தொழிற்சங்கங்கள்  தோற்றதாக வரலாறே உலகில் இல்லை!…

அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டம்  மாபெரும் வெற்றி பெற்றுள்ளது..

தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டாரத் தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்!…

வேலை நிறுத்தத்தில் வருமான வரித்துறையைச் சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்..

எட்டாவது ஊதியக்குழு அறிக்கையினை  உடன் வெளியிட வேண்டும்!.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை GDP இல் 6%ஒதுக்க வேண்டும்.  லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும்!  ஒப்பந்த அடிப்படை நியமனங்களை அறவே கைவிட வேண்டும்!.

நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்! நியமனத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்!

கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடரும் என தமிழக ஆசிரியா்கள் கூட்டணி சார்பாக ஐபெட்டோ வா.அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.