தங்க கட்டிகள் தருவதாக ரூ.48 லட்சம் மோசடி !
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் முத்துக்குமார்(48). தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் தங்க கட்டிகள் குறைந்த விலைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த முத்துக்குமார் அதில் உள்ள தொடர்பு தொடர்பு எண்ணில் பேசியபோது, நேரடியாக ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு தங்க கட்டிகளை வாங்கிக் கொள்ளலாம் என அந்த நபர் கூறியுள்ளார்.
கருப்பையா(23)
இதனை எடுத்து மதுரையில் இருந்து ரூ. 48- லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு முத்துக்குமார் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு இருந்த அந்த நபர் ரூ. 48 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஒரு தங்கக் கட்டியை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா(23) என்ற இளைஞரிடம் கொடுத்து இந்த தங்க கட்டியை நகைக்கடையில் பரிசோதனை செய்த பின்னர் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து அவரை அனுப்பி உள்ளனர்.

பின்னர் இருவரும் ஒரு ஆட்டோவில் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியார் நகை கடைக்கு சென்று முத்துக்குமார் நகைக்கடைக்குள் சென்றவுடன் உடன் வந்த கருப்பையா தங்க கட்டியுடன் தப்பி ஓடி உள்ளார் பின்னர் அங்கு தயாராக இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (22 ) என்பவருடன் கருப்பையா ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட முத்துக்குமார் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக் பாபு, சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் குற்றப் பிரிவு போலீஸார் விரைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்போது செல்போன் எண்களை வைத்து அடையாளம் பார்த்தபோது, பைக்கில் தப்பி ஓடிய கருப்பையா, கண்ணன் இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்த போது பணத்தையும், தங்க கட்டியையும் அந்த தப்பி ஓடிச் சென்ற முக்கிய நபரிடம் கொடுத்து விட்டதாகவும், எங்கள் இருவருக்கும் கமிஷன் மட்டுமே கொடுத்து பணியில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர். போலீஸார் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.