ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை !!!
2026 டிசம்பர் இறுதியில் தங்கம் விலை 1,50,000/- உச்சம் தொடும் ஏழை மக்களுக்கு 8 கேரட் தங்கம் ‘333’ ஹால் முத்திரையுடன் விற்பனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரத்தைப் பார்த்து காதல் உணர்வுடன் நகைச்சுழை இழையோட,’“தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ…. என்றுதான் நான் பெறுவேனோ? என் தங்கத்தை வாரியணைத்து அகம் மகிழ்வேனோ?” என்று பாடுவார்.
உடனே மதுரம்,“ இப்ப தங்கம்னு சொன்னது என்னைத்தானே?” என்று கேட்பார்.
என்.எஸ்கிருஷ்ணன்,“பாட்டு பாடுறேன். அதற்குப் பித்தளை காசு, வெள்ளிக் காசு வரை வந்துள்ளது. தங்கம் கிடைக்கவில்லை. தங்கம் வந்துசின்னா…. அதுதான் தங்கமே…ன்னு பாடுகிறேன்” என்பார். தங்கம் எளிய மக்களுக்குக் கிடைக்காமல் எட்டா கனியாகவே இருக்கும் என்பதை 1957இல் வெளிவந்த அம்பிகாபதி திரைப்பட பாடலில் இடம் பெற்றிருக்கும்.
சரி…! விஷயத்திற்கு வருவோம். கடந்த ஆண்டின் 2025 ஆண்டு டிசம்பர் மாத்தில் தங்கம் விலை ஒரு சரவன் (22 காரட்டு) 1 இலட்சத்தைத் தாண்டி சாதனை புரிந்தது. நடுத்தர மக்கள் திகைத்து நின்றார்கள். ஏழை மக்கள் செய்வது அறியாது தவித்தார்கள். தங்கம் எப்போதும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களும் எட்டா கனியாகவே இருந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்த செய்தியே… எனினும் தங்கம் வாங்குவது, அணிலகன் செய்வது அல்லது சேமிப்பது என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
2026-ஆம் ஆண்டு ஜனவரி மாத தற்போதைய நிலவரப்படி, தங்கம் விலையைச் சவரன் கணக்கில் பார்ப்பது எதிர்காலத்தில் தங்கத்தின் விலையேற்றறைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.
தற்போது (ஜனவரி 16, 2026) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 கேரட்) சென்னையில் சுமார் ₹1,06,000 முதல் ₹1,06,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. உலகப் பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளைச் சவரன் கணக்கிற்கு மாற்றினால் கிடைக்கும் உத்தேச விலை மாற்றங்கள்
இதோ:
நிபுணர்களின் சவரன் விலை கணிப்பு (2026 இறுதிக்குள்) சர்வதேச சந்தையில் கணிக்கப்பட்டுள்ள விலையை இந்திய மதிப்பில் ஒரு சவரனுக்கு (8 கிராம்) மாற்றினால் வரும் உத்தேச விலைகள்:
தற்போதைய எதிர்பார்க்கப்படும் விலை உயர்வு (உத்தேசமாக)
ஜனவரி 2026 ₹1,06,320
2026 மார்ச்/ஏப்ரல் ₹1,12,000
2026 அக்டோபர்/நவம்பர் ₹1,28,000
2026 டிசம்பர் (இறுதி) ₹1,35,000+
தங்கத்தின் விலையேற்றத்திற்குக் காரணம்
தங்கம் ஒரு சவரன் ₹1.35 லட்சத்தைத் தாண்டி 1,50,000 அளவிற்குத் தொடும் என நிபுணர்கள் சொல்ல 3 முக்கிய காரணங்கள் உள்ளன:
பணம் வீக்கம்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்போது, நாம் இறக்குமதி செய்யும் தங்கத்தின் விலை உயர்கிறது.
பாதுகாப்பான முதலீடு: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும்போது, பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைச் சவரன் கணக்கில் தங்கமாக மாற்றுகிறார்கள்.
மத்திய வங்கிகளின் சேமிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உள்ளிட்ட பல நாடுகள் அதிகளவில் தங்கத்தைச் சேமிக்கத் தொடங்கியுள்ளன.
நடூத்தர, ஏழை மக்களுக்கு 8 கேரட் தங்கம் விற்பனைக்கு வருகின்றது.
தங்கம் விலை மிகவேகமாக உயர்ந்து வரும் நிலையில், தற்போது 22 கேரட் மற்றும் 18 கேரட் தங்கத்திற்கு மாற்றாக 8 கேரட் (8K) தங்கம் பற்றிய பேச்சுகள் பரவலாக எழுந்துள்ளன. இது குறித்த முழுமையான தகவல்கள்:
8 கேரட் தங்கம் என்பது 33.3% தூய தங்கத்தையும், மீதமுள்ள 66.7% மற்ற உலோகங்களையும் (செம்பு, வெள்ளி போன்றவை) கொண்டது. பழைய காலத்தில் சொல்லப்பட்ட ஐம்பொன்தான் இது.
தற்போதைய (ஜனவரி 16, 2026) சந்தை நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் தங்கம் சுமார் ₹13,230 முதல் ₹13,310 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 8 கேரட் தங்கத்தின் தோராயமான விலை பின்வருமாறு இருக்கலாம்:
1 கிராம் 8 கேரட் தங்கம்: சுமார் ₹4,800 – ₹5,200 (தோராயமாக)
8 கிராம் (ஒரு சவரன்): சுமார் ₹38,000 – ₹42,000 (தோராயமாக)
நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
புழக்கம்: இந்தியாவில் பெரும்பாலும் 22 கேரட் (ஆபரணத் தங்கம்) மற்றும் 18 கேரட் (வைர நகைகள்) மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. 8 கேரட் நகைகள் சில குறிப்பிட்ட பெரிய நகைக்கடைகளில் அல்லது ஐரோப்பிய நாடுகளில் ‘மலிவு விலை நகை’ (Low-purity gold) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
தூய்மை (Purity): 22 கேரட்டில் 91.6% தங்கம் இருக்கும் (KDM/916). ஆனால் 8 கேரட்டில் வெறும் 33.3% மட்டுமே தங்கம் இருப்பதால், அதன் நிறம் மற்றும் ஜொலிப்பு காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது.
மறுவிற்பனை மதிப்பு (Resale Value): 8 கேரட் நகைகளை மீண்டும் விற்கும்போது அல்லது மாற்றும்போது அதற்கு மிகக்குறைந்த விலையே கிடைக்கும். ஏனெனில் அதில் தங்கம் குறைவாகவும், இதர உலோகங்கள் அதிகமாகவும் கலக்கப்பட்டுள்ளன.
அடையாள முத்திரை: நீங்கள் 8 கேரட் நகை வாங்கினால், அதில் ‘333’ என்ற ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
தங்கத்தின் விலையேற்றத்தைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளாமல், தங்கள் பிள்ளைச் செல்வங்களைத் தங்கமே என்று அழைத்து ஆறுதல் கொள்வோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.