தங்கர்பச்சானுக்கு நல்ல நேரம் ! ஜோசியருக்கு   கெட்ட நேரம் !

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தங்கர்பச்சானுக்கு நல்ல நேரம் ! ஜோசியருக்கு   கெட்ட நேரம் !

பொதுவாக தேர்தல் வந்தாலே சில நட்சத்திர போட்டியாளர்களை வேட்பாளராக நிறுத்துவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில்  கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் இயக்குனர் தங்கர்பச்சான் வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர்  ஏப்ரல்  8 .(திங்கட்கிழமை) கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, கிளி ஜோதிடர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர் பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, ‘நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா?’ என, ஆர்வமாக கேட்டார்.

‘என் கிளி கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என அனைத்தையும் தெளிவாக கூறி விடும்’ என தெரிவித்த கிளி ஜோதிடர், கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு கூறினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பல சீட்டுகளை நிதானமாக எடுத்து போட்ட கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுத்து, தங்கர் பச்சானை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூண்டுக்கு திரும்பியது.

வெற்றி என கிளி ஜோதிடர் அடித்து கூற, ‘நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை’ என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார் ஜோசியம் பார்த்த அந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் தென்னம்பாக்கம் கோவில் அருகே ஜோசியம் பார்த்த 2 கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார் அன்புமணி ராமதாஸ்

கேஎம்ஜி

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.