“கூகுள், மெட்டா கண்ணாடி இழை திட்டங்களில் பெரும் முதலீடு – ஜியோ, ஏர்டெல் இடையே கடுமையான போட்டி”
இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடியிழை கேபிள் கட்டமைப்பில் சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அதிகளவில் முதலீடு செய்கின்றன. இதனால் இங்கு ஏற்கெனவே டேட்டா சேவைகளை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
அடுத்தாண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறு வனம் மும்பையில் ப்ளு-ராமன் சப்மெரின் கேபிள் சிஸ்டம் என்ற தகவல் தொடர்பு இணைப்பை தொடங்கவுள்ளது. 218 டிபிபிஎஸ் திறனுள்ள இந்த இணைப்பு திட்டத்தின் மதிப்பு 400 மில்லியன் டாலர். இதில் இத்தாலியின் ஸ்பார்கிள் நிறுவனமும் முதலீடு செய்கிறது.
இதேபோல் மெட்டா நிறுவனம் கடலுக்கடியிலான கேபிள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் திறன் 500-டிபிபிஎஸ். இத்திட்டத் துக்கு 3 ஆண்டுகளில் 10 பில் லியன் டாலர் முதலீடு தேவைப்படும். நுகர்வோர் மற்றும் ஏஐ நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளதால், மெட்டா நிறுவனம் இங்கு கடலுக்கடியிலான கேபிள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்கிறது.
கடலுக்கடியில் கேபிள் அமைக்கும் திட்டம் வேகமாக வளா்ந்து வருகிறது. 2016-20-ம் ஆண்டு காலத்துக்குள் 107 புதிய கேபிள்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 1. 13.8 பில்லியன் டாலர். 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை மேலும் 18 பில்லியன் டாலர் மதிப்பில் கடலுக்குடியில் கேபிள் அமைக்கும் திட்டத்தில் முதலீடு தலீடு செய்யப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இந்தியா சாதகமான இடத்தில் உள்ளது.
“மெட்டா நிறுவனத்தின் கேபிள் இணைப்பு குஜராத் அல்லது சென்னையை இணைக்கலாம் என கூறப்படுகிறது. குஜராத் தில் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ரிலை யன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப் பெரிய செயற்கை நுண் வளர்ந்து வருகிறது. 2016-20-ம் ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைத்து வருகிறது. இதன் திறன் | ஜிகாவாட் சென்னையில் ரிலையன்ஸின் கூட்டு நிறுவனம் ஏற்கெனவே ஒரு தரவு மையத்தை இயக்கி வருகிறது.
கடலுக்கடியிலான கேபிள் நெட்வொர்க்கை, தரைப் பகுதியில் உள்ள கட்டமைப்புடன் இணைக்கும் தரவு மையமாக லேண்டிங் ஸ்டேஷன் செயல்படுகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 2 ஆப்ரிக்கா பியர்ல்ஸ் (180 டிபிஎஸ்), இந்தியா-ஏசியா-எக்ஸ்பிரஸ் (ஐஏஎக்ஸ்) (200 டிபிஎஸ்) மற்றும் இந்தியா-ஐரோப்பா-எக்ஸ்பிரஸ் (ஐஇஎக்ஸ்) (200 டிபிஎஸ்) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து கடலுக்கடியிலான 3 கேபிள் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் இந்நிறுவனங்களின் தற்போதைய திறன் 4 மடங்குக்கு மேல் அதிகரிக்கும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடலுக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடியிழை கேபிள் மூலம், தரவு பரிமாற்றம் அதிவேகத்தில் இருக்கும். இந்தியாவின் லாபகரமான சந்தையை மையமாகக்கொண்டு, இத்திட்டத்தில் முதலீடு செய்வதில் போட்டி நிலவுகிறது.
உலகளவில் தகவல் தொடர்புக்காக கடலுக்கடியில் அமைக்கப்படும் கேபிள் நெட்வொர்க் சந்தையின் மதிப்பு கடந்தாண்டு 27.57 பில்லியன் டாலராக இருந் தது. இது 2028-ம் ஆண்டில் 40.58 பில்லியன் டாலராக உயரும் எனத் தெரிகிறது.