விஜய் டிவியை விட்டு வெளியேறும் கோபிநாத், பிரியங்கா..நீயா நானா, சூப்பர் சிங்கர் அவ்ளோதான்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகின்றன..  படங்கள் மட்டுமின்றி விஜய் டிவி நிகழ்ச்சிகளும் கலர்ஸ் டிவியிலேயே ஒளிபரப்பாக உள்ளன. இந்நிலையில், விஜய் டிவியை விட்டு பிரியங்கா, கோபிநாத் வெளியேறுவதாக செய்திகள் கசிந்தவாறே உள்ள நிலையில், அதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவிபிரியங்கா, கோபிநாத் எல்லாருமே விஜய் டிவியைவிட்டு வெளியே போவதாக வரும் தகவல் உண்மைதான் என்றும், அது உறுதிபடுத்தப்பட்ட தகவல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் பாலாஜி பிரபு தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால், இதற்கு எந்த பிரச்சனையும் காரணமுமில்லை.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மணிமேகலை – பிரியங்கா
பிரியங்கா வெளியேறுவதற்கு மணிமேகலை தான் காரணம் என்று பலரும் சொல்கிறார்கள்.. பிரியங்காவால் நிறைய தொகுப்பாளினிகள் ஏற்கனவே விஜய் டிவியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அந்தவகையில், சில மாதங்களுக்கு மணிமேகலையும் வெளியேறி போனார்.. ஆனால், பிரியங்கா வெளியேறுவதற்கு காரணம் அதுவல்ல.

மணிமேகலை - பிரியங்கா
மணிமேகலை – பிரியங்கா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

விஜய் டிவியை பொறுத்தவரையில், விதவிதமான ஷோக்களில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தினார்கள்.. இன்று டாப் ஹீரோவாக வந்துள்ள சிவகார்த்திகேயன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலிருந்து வந்தவர்தான். அது இது எது நிகழ்ச்சியை அவர் நடத்தினாலும், புகழை தந்தது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிதான்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என்று இரு வகையான நிகழ்ச்சிகளில் ஏராளமான பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.. அதேபோல, உலக அளவில் தமிழர்கள் அறியப்படும் நிகழ்ச்சி நீயா நானா.. இதில் கோபிநாத் தொடாத டாபிக்கே கிடையாது. இது ஒரு அறிவிப்பூர்வமான நிகழ்ச்சி.. பலரையும் ஆச்சரியப்படுத்திய நிகழ்ச்சி. இந்த நீயா நானா நிகழ்ச்சியின், யூடியூப் ஷாட்ஸ்களில் கோபிநாத் பேசுவது தினந்தோறும் டிரெண்டாகி கொண்டேயிருக்கிறது.

சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கப்பட்டபோது, நிறைய விமர்சனம் வந்தது.. இதில் என்ன புதுமை இருக்க போகிறது? என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், சமையலில் அசத்தியதுடன், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், ஷிவாங்கி இருவரையும் நிஜமாகவே அண்ணன் தங்கை என்றே பலரும் நினைத்துவிட்டார்கள..

சரவணன் மீனாட்சி சீரியல்:

சீரியல்களும் வேற வேற மாதிரியான சீரியல் வெளியாகி மக்களை ஈர்த்தன.. வேறு சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், விஜய் டிவியும் சீரியல்களை ஒளிபரப்பு, மக்களை இழுத்தது. கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி என்று அனைத்து சீரியல்களுமே அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. லொள்ளு சபா நிகழ்ச்சி உட்பட அத்தனை பேருக்கும் விஜய் டிவி அடையாளம் தந்தது.. இதில் டிடி-யின் பங்கு மிகவும் முக்கியம்.

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவி சீரியல்கள்

ஆனால் தற்போது, விஜய் டிவியை கலர்ஸ் வாங்க போகிறது .. இதனால், நிறைய மாற்றம் செய்யப்பட்டு, புது பொலிவுடன் வரப்போகிறது. குறிப்பாக, பெயர் மாற்றம் செய்ய போகிறார்கள், லோகோ மாற்றம் செய்ய போகிறார்கள்.. பழைய நிகழ்ச்சிகளையும் மொத்தமாக நீக்கிவிட்டு, புது புது விஷயங்களை கொண்டு வரப்போகிறார்கள்.. இதனால், மகாபா, பிரியங்கா, கோபிநாத் என அனைவருமே வெளியேற போகிறார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹாட்ஸ்டாரை ஜியோ வாங்கிவிட்டார்கள்.. கலர்ஸ் விஜய் டிவியை வாங்கிவிட்டார்கள்.. அதாவது, ஜியோ, கலர்ஸ் ஒன்றுதான்.. மொத்தத்தில், அம்பானி குரூப் வாங்கியதாகத்தான் இதை சொல்லணும்’ என்றார்.

 

—    ஆரன், டிஜிட்டல் படைப்பாளி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.