இதற்காகத்தானடி உன்னை அரசு பள்ளியில் சேர்த்தோம் …
வீடியோ கால் வந்தது…
கனிராவின் பள்ளி தோழி : ஆன்ட்டி கனிரா கிட்ட பேசணும் …
கனிரா : இதுதான் உங்க வீடா ?
ஆமாடி உங்க வீடு காமி…
கனீரா: ஏய், எனக்கு சரியா கேட்கல, விட்டுவிட்டு கேக்குது இரு நான் கட் பண்ணிட்டு நார்மல் கால் பண்றேன்…
நான் : ஏய் நாய்க்குட்டி…. நல்லா தானே கேட்டுச்சு, ஏன் பொய் சொல்லி கட் பண்ற ,அவ பாவம் இல்ல…
கனிரா: அம்மா…. போம்மா …
அவங்க வீட்ட விட நம்ம வீடு நல்லா இருக்கு… அவ பாத்தா நம்ம வீடு அப்படி இல்லைனு கவலைப்படுவா இல்ல …அதனால தான் கட் பண்ணிட்டேன்…

என் செல்ல மகளே🤩 இதற்காகத்தானடி உன்னை
“அரசு பள்ளியில்” சேர்த்தோம்…
மகிழ்வித்து விட்டாய் என் செல்வமே.
— அ.யோகானந்தி








Comments are closed, but trackbacks and pingbacks are open.