தலைநகர் டெல்லியில் திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐபெட்டோ (AIFETO) அகில இந்திய அமைப்பின் சார்பில், நவம்பர் 14ஆம் தேதி டெல்லி ஜந்தர் பந்தரில் ஒருநாள் அடையாள தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஐபெட்டோ சார்பில் வெளியான செய்தி குறிப்பில், “
*Cancel TET compulsion.*
*Amendment the RTE Act.*
*Restore old Pension scheme.*
*Uphold NAKARA judgement.*
*Withdraw sections 149 and 150 of the Finance act 2025.*
*Teachers serve children Till their very Last Breath. Is Retirement the Crime?.*

உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாப் போராட்டம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
*ஐபெட்டோ அகில இந்திய பொதுச் செயலாளர் திரு சுதாகர் சுவான் அவர்கள் கோரிக்கை முழக்கமிட்டு… தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து விளக்க உரை ஆற்றினார்.*
*ஐபெட்டோவின் தேசியத் தலைவர்கள் ஆவேசமாக கோரிக்கை விளக்க உரையாற்றி பேசினார்கள்.*
*இந்திய வரைபடத்தைப் பார்ப்பது போல் டெல்லி ஜந்தர் மந்தரில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டார்கள்…*
*தமிழ்நாட்டின் சார்பில் தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு அ.வின்சன்ட் பால்ராஜ் அவர்கள் ஒருங்கிணைப்பில் 86 பேர் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் அ. எழிலரசன், மாநில மகளிரணிச் செயலாளர் கு.ரமாராணி மாநில துணைத்தலைவர்கள் ஒ.கோ.செந்தில்குமார், துரை க. சுந்தரமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கயத்தாறு செ.கணேசன், மாநில துணைச் செயலாளர்கள் அ.முரளி, கு.ஜான், ம.சாந்தி சொரூபமேரி, மாநில அமைப்பு செயலாளர் த.ச.ரமேஷ், ஐபெட்டோவின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட வட்டார முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பெருமையினை சேர்த்தார்கள்.*
*மாநில துணைச் செயலாளர் அ.முரளி அவர்கள் தமிழில் விண்ணதிர கோரிக்கை முழக்கமிட… தமிழ்நாட்டு இயக்கப் போராளிகளின் குரல் தலைநகரில் ஓங்கி ஒலித்தது!..*
*அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் தலைமையுரையாற்றும் போது Spoken language பேசும் மொழியில் பேசி ஒட்டுமொத்த ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களையும் மெய்மறந்து ரசித்து கேட்க வைத்தது!.*
*தர்ணா போராட்ட கோரிக்கை தீர்மானங்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.!..*” என்பதாக தெரிவித்துள்ளார்கள்.
— அங்குசம் செய்தி பிரிவு








Comments are closed, but trackbacks and pingbacks are open.