2025 – 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆளுநர் விருதுகள் அறிவிப்பு !

2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆளுநர் விருதுகள் (Governor’s Awards 2025 – 2026 ஆம் ஆண்டு வழங்கப்படுபவை) சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக ஜனவரி 13, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் 2026 ஜனவரி 26, குடியரசு தின விழாவின் போது சென்னை ராஜ்பவனில் (லோக் பவன்) நடைபெறும் விழாவில் ஆளுநரால் வழங்கப்படும்.
2026-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருது பெற்றவர்கள்:

சமூக சேவை (Social Service):

நிறுவனப் பிரிவு: வெங்கட்ராமன்

மெமோரியல் டிரஸ்ட், செங்கல்பட்டு மாவட்டம்

(அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியதற்காக).

தனிநபர் பிரிவு:

திரு. ஆர். சிவா, சென்னை

(தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக).

திரு. பி. விஜயகுமார், திருச்சி

(ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ததற்காக).

சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection):

நிறுவனப் பிரிவு:

கிரீன் ராமேஸ்வரம் டிரஸ்ட்,  ராமநாதபுரம் மாவட்டம்

(நீர்நிலைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பணிகளுக்காக).

தனிநபர் பிரிவு:

திரு. ஆர். மணிகண்டன், கோவை

(‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ மூலம் நீர்நிலைகளை மீட்டெடுத்ததற்காக).

Comments are closed, but trackbacks and pingbacks are open.