அங்குசம் சேனலில் இணைய

சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு முடிவு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

மிழகத்தில்  பலதரப்பட்ட வளமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வருகிறது. இங்கு, 43 ஆயிரத்து 635க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மாநிலத்தில், 17 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 3 பாதுகாக்கப்பட்ட பகுதிகள், 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. நீலகிரி, மன்னார் வளைகுடா, அகஸ்தியா் மலை என, மூன்று உயிர்கோள் காப்பகங்கள் உள்ளன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களான மாமல்லபுரம் நினைவு சின்னங்கள், தஞ்சாவூா் பிரகதீஸ்வரா் கோயில், அரியலூா் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் போன்றவையம் தமிழகத்தில் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் சுற்றலாவை மேம்படுத்த, மக்கள் அதிகம் அறியாத சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்த, சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

முதற்கட்டமாக, மக்கள் அதிகம் அறிந்த, அறியாத சுற்றுலா தலங்கள் என 392 இடங்களை பட்டியலிட்டுள்ளது. அவை, புத்தபாதை, ராமாயணம், கடற்கரை, காலனித்தவம், திவ்ய தேசம், அறுபடை வீடு, தனித்துவ தளங்கள், குகைகள் கோட்டைகள், ஜெயின் பாரம்பரியம், மலைப்பகுதிகள், இயற்கை பாதை, நீர்விழ்ச்சிகள், கலாசார தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பகுதிகளில், சுற்றுலா வளா்ச்சி பணிகளை மேற்கொள்ள, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுலா துறை உயர் அதிகாரிகள் கூறியது.

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளைக் கவர, மக்கள் அதிகம் அறியாத சுற்றுலா இடங்களை பிரபலப்படுத்த உள்ளோம். பிரபலமான பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் செல்லும் போது, அதன் அருகில் உள்ள அறியாத சுற்றுலா பகுதிகளுக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுவரை 392 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

அவற்றில், மத்திய மாநில அரசுகள் நிதியுதவியுடன், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் இவ்வாறு அவா்கள் கூறினா்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.