கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நவம்பர் 2 ஆம் தேதி அகில உலக கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாளாக கொண்டாடுகிறார்கள்.. இந்த நாள் நமக்கு ஒரு கொண்டாட்டம் ஆக அமைந்து விடுவதற்கு இந்த நாள் கடைபிடிப்பதில்லை. மாறாக நமக்கு நல் வழி சொல்லி நம்மை வளர்த்து உருவாக்கிய முன்னோர்களை நினைவு கூற செய்வதே இந்த நாளின் நோக்கம்.

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது. கல்லறை என்பது முடிவின் தொடக்கம் அல்ல. மாறாக விண்ணக வாழ்வின் தொடக்கம் என்பதை நம் மனதில் நிறுத்தியவர்களாய் இந்த கல்லறை திருநாளை நினைவு கூர்வோம்.
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் உனக்கு இன்பம் தருவார் என்ற பாடல் மண்ணகத்தில் உள்ள புகழை எண்ணி நாம் பெருமை கொள்ளாமல் விண்ணகத்தில் இறைவன் புகழ்வதை ஏற்ற மக்களாக வாழ அழைக்கப்படுகிறோம். ஒரு மனிதன் வாழும் போது அவனை புகழமால் அவன் இறந்த பின் அவனுக்கு மதிப்பு கொடுப்பது பயன் அற்றது…

நாம் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் ஒன்று மட்டும் நினைவு கூறுவோம் மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என்ற பாடல் வரிகள் நாம் மண்ணுக்கு தான் திரும்பி நிச்சயம் செல்லவேண்டும் என்பதையும்.. எனவே வாழும் நாளில் பிறர் பயன் பெறும் வகையில் நல்ல செயல் நாம் செய்யும் போது இறைவன் நமக்கு நிலைவாழ்வை விண்ணகத்தில் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்..
வாழும் இந்த உலகம் நிலையற்றது எனவும். உலகத்தில் உள்ளவற்றை மையப்படுத்தி வாழாமல் இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தி வாழும் போது நமக்கு மண்ணகத்தில் இறப்பு நமக்கு வந்தாலும் விண்ணகத்தில் நிலைவாழ்வு உண்டு என்ற எதிர்நோக்கிய பயணிகளாக வாழ முயற்சி செய்வோம்.
— அ.மாணிக்கம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.