எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !
எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! அம்பலப்படுத்தும் தோழர் மருதையன் !
கேள்வி : நீண்ட காலத்துக்கு பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீங்கள் ஊர் ஊராக மேடைகளில் பேச தொடங்கியிருக்கிறீர்கள். இந்த மாற்றத்தினுடைய பின்னணி என்ன?
பதில் : முக்கியமான காரணம். திருப்பரங்குன்றம் மலையில இருக்கக்கூடிய அந்த தர்காவை இலக்காக வைத்து அங்க ஒரு மத பூசலை உருவாக்குவது என்ற நோக்கத்துக்காகதான் வைக்கிறாங்க ஒரு விஷயம். இரண்டாவது அவங்க கோரக்கூடிய அந்த கோரிக்கை தீபத்தூண். அந்த கோயிலினுடைய மத சம்பிரதாய பழக்கம் அதுல வரக்கூடியது அல்ல. ஒரு கோயில் தன்னுடைய பழக்கம் என்னன்றத அந்த கோயில் தான் முடிவு பண்ணனும். அத ஒரு கட்சி முடிவு பண்ண முடியாது என்ற அடிப்படையில் தான் தமிழக அரசு அதை மறுக்கிறது. அது ஏற்கனவே ஜெயலலிதா அரசு எடப்பாடி அரசு எடுத்த நிலைப்பாடுதான் இது புதுசு இல்ல. இப்ப எடப்பாடிதான் அதை மாத்திட்டு இருக்கார் அது போகட்டும். இப்ப இதுல பிரச்சனை நீதிமன்றம் தவறான தீர்ப்பை கொடுத்திருக்கு.
தமிழ்நாட்டில வட இந்தியாவை போல மத கக்கலவரம் நடக்காது. இங்க இந்து முஸ்லிம் பகைமையை தூண்ட முடியாது. இது பெரியார் பிறந்த மண் திராவிட செல்வாக்கு செலுத்தும் மண் அதனால முடியாது. அதெல்லாம் உண்மைதான். இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டும் நோக்கத்துடன் இப்படி ஒன்னு நடக்கும்போது மதச்சார்பின்மையை விரும்புகின்ற வலியுறுத்தக்கூடிய மக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவங்க ஒரு திரள் வந்து நின்றிருக்க வேண்டுமா இல்லையா? அப்படி நடக்கவில்லை. அதன் அவசியத்தை வலியுறுத்தற்காவே கூட்டங்களில் பங்கேற்கிறேன்.
கேள்வி: ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. சாமி பேச்ச கேட்பியா? மாமி பேச்ச கேட்பியா? னு முழக்கம் வச்சிருந்தீங்க. அதுபோல, மக்களை அணிதிரட்டி ஏன் அந்த இடத்துக்கு கொண்டு போகல?
பதில் : பெரியார் இயக்கங்களோ இடதுசாரி இயக்கங்களோ கருத்து பிரச்சாரம் செய்றாங்க. அரசே நடவடிக்கை எடு! போலீசை கைது செய்! அப்படின்னு அரசுக்கு கோரிக்கை வைப்பதோடு தங்களுடைய பணி முடிந்ததாக கருதுகிறார்கள். ஒரு பாசிஸ்ட் அமைப்பு அரசு அதிகாரத்தை வைத்து மட்டும் இயங்குவதில்லை. களத்தில் தங்களுடைய ஆட்களை இறக்கி செயல்படுகிறார்கள். திராவிட இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட்ட இயக்கங்களும் கூட களத்தில் மக்களை திரட்டித்தான் இன்றைக்கு பெற்றிருக்கிற இந்த செல்வாக்கை பெற்றிருக்கறாங்க. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு பிறகு அதை கொஞ்சம் மறந்துட்டாங்க.
நாத்திகம் பேசும் ஸ்டாலின் அரசின் போலீஸ், சிறுபான்மை ஓட்டுகளை கவர இப்படி தடுக்கிறார்கள் என்று ஒரு கருத்தை சொல்லும்போது அது சாதாரணமான இந்துக்கள் என்று சொல்பவர்களிடம் எடுபடக்கூடிய சூழல் இருக்குது. இந்த பக்கம் ஒரு 500 பேர் ஆயிரம் பேர் திரண்டிருந்தால், இந்த வாதம் அடிபட்டு போயிருக்கும். இது ஒரு ஆரம்ப நிலை. இதை இப்படியே விட்டால், வட இந்தியாவில் நடப்பது போல இங்கேயும் நடக்கும். அவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள். கண்டிப்பா உங்களுக்கு கொள்கை இருந்தா நீங்க ரோட்ல வந்து நிக்கணும்னு சொல்றேன்.
கேள்வி : நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மேல்முறையீட்டுக்கான வாய்ப்பையே மறுத்து நான் நீதிமன்றத்தினுடைய அதிகாரத்தை நிலைநாட்ட விரும்புகிறேன் என்கிறார்… அவரது சர்ச்சை தீர்ப்புகளின் பட்டியல் நீள்கிறது. இவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளும் நீதிமன்ற விவகாரங்களாகவே கையாளப்படுகிறதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் செயல் வரம்பை மீறி, சிதம்பரத்தில் தமிழ்பாடும் உரிமை, அனைத்து சாதி அர்ச்சகர் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான கோரிக்கை. சமத்துவத்துக்கான கோரிக்கை. ஆக, அந்த கொள்கைகளில் யாருக்கெல்லாம் நம்பிக்கை இருக்குதோ, அவங்க எல்லாம் களத்துக்கு வரணும். ஆனால், வரவில்லை. காலப்போக்கில் அவங்களுடைய பார்வை மாறிருக்கு. போராட்டங்களும் கூட ஒரு அடையாள போராட்டமா இருக்குது.
92 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ஸ்ரீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினோம். கிடாவெட்டு தடைச்சட்டத்தை மதுரை பாண்டி கோவில் உட்பட எல்லா இடத்திலும் ஏற்று கொள்ளவில்லை. ஆனாலும், அவர்கள் அதை செய்யவில்லை. ஒரு இயக்கத்தின் சார்பில்தான் கிடாவெட்டும் போராட்டம் நடைபெற்றது.
நீங்க பாசிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தெல்லாம் அவங்கள திருத்த முடியாது. அதை எதிர்கொள்வோம் என்ற முறையில வந்து நிக்கணும். அல்லது இந்த எதிர்கருத்து அவங்களை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கணும். கண்டிப்பா அவங்க தற்காப்பு நிலைக்கு போகும் அளவுக்கு இருக்கணும்.

கேள்வி : எல்லாரும் இந்த பிரச்சனையை கேக்குறீங்க. ஆனா ஒத்த ரூபா கூட காசு கொடுக்க மாட்டேங்கறீங்க. நான் லட்சக்கணக்குல கை காச போட்டு நான் செலவு பண்ணிட்டு இருக்க வேண்டியது இருக்குனு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடியோ வெளியிட்டிருக்கிறாரே?
இதுல, ரெண்டு பிரச்சனை இருக்குது. ஒன்னு அங்கலாய்ப்பு போல பேசிட்டு போறது. ரெண்டாவது ரொம்ப ஆபத்தானது. நம்ம எதிர்த்து பேசினாலும் கூட அவன ஒன்னும் பண்ண முடியாது. எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறார்கள் என நினைப்பது. உண்மைதான் அந்த மாதிரி நாம் ஏன் வேலை செய்யல? நாம் செய்வதற்கு என்ன பண்ணனும்னு சம்பந்தபட்டவர்கள் யோசிக்கனும். பொதுவுடமை இயக்கமாக இருக்கட்டும் அல்லது திராவிட இயக்கமா இருக்கட்டும். எல்லாருக்கும் அவங்க அவங்க கட்சியை வளர்க்கணும். அப்படின்னு ஒரு நோக்கம் எல்லாருக்கும் இருக்கும். ஆனா அதை காட்டிலும் பாசிசத்தை வீழ்த்துவது அவசியம் என்ற பொதுநோக்கத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுவதை முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை கணக்கில் கொள்ள வேண்டும்.
கேள்வி : இன்றைய டிஜிட்டல் மயமான உலகில் இதுபோன்ற கருத்தியல் பிரச்சாரமும் எதிர்ப்புகளும்கூட டிஜிட்டல் மயமாகிவிட்டதா?
பதில் : நன்மையும் இருக்கு. தீமையும் இருக்கு. நம்ம சோசியல் மீடியா சுதந்திரமா இருக்குனு நாம் நினைத்தால் அது உண்மையில்லை. மென்மேலும் கண்காணிப்புக்குரியதாக மாறிவருகிறது. நாம் எதை விரும்பி தேர்வு செய்கிறோமோ அதற்கு இசைவான வீடியோக்கள் மட்டுமே நம் கவனத்திற்கு வருகிறது. அதனுடன் மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்துக்களை கொண்ட வீடியோக்கள் வருவதில்லை.
அடுத்து, விளையாட்டுக்கு மாற்றா வீடியோ கேம் ஆனது போல செயல்பாட்டுக்கு மாற்றாக மாறிவிடுகிறது. ஒரு சமூக நடவடிக்கைக்கு மாற்றாக பேஸ்புக்ல ஒன்னு எழுதிட்டேன் அல்லது டிவிட்டர்ல போட்டுட்டேன் பாத்துட்டாங்க இவ்வளவு லைக் வந்துருக்குனு அது ஒரு விதமான திருப்தியை கொடுக்கிறது. செயல்பட்டது போன்ற ஒரு மயக்கத்தை ஏற்படுத்துது. பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு அது பயன்படுமே தவிர, நடைமுறையில் எதுவும் இருப்பதில்லை. உண்மையான மனிதர்களோடு நேரில் உரையாட வேண்டியிருக்கிறது.
அடுத்து, இன்றைக்கு பொதுவாக ரீல்ஸ் ஷாட்ஸ் இன் காலம் இது. இந்த தலைமுறைக்கு கவனிப்பதற்கான நேரம் குறைஞ்சுகிட்டே வருது. மனித மூளையின் ஆற்றலை இது குறைக்கிறது. மூளையில ஊனமுற்றவர்களாக மாற்றுகிறது. கூகுள் காலம் முடிந்தி சாட்பிஜிடி, பர்சிட்டி வந்துவிட்டது. சிந்திக்கும் வேலையையும் ஏ.ஐ. நிறுத்திவிட்டது.
பொதுவாக இந்துத்துவ பிரச்சாரமெல்லாம் பாக்கெட் பாக்கெட்டா ஜாதி, கிளாஸ், ஊரு அப்படினு டேட்டா கையில வச்சுக்கிட்டு அவங்களுக்கு தகுந்த வாட்சப் செய்தியை மட்டும் அனுப்புறாங்க. அவங்களால அத செய்ய முடியுது. அப்போ அதிலிருந்து நம்மை தற்காத்து கொள்வதற்கு நமக்கு சுயபுத்தி வேணும். மக்களோட உரையாடனும்.
நேர்காணல் : வே.தினகரன்
தொடரும்








Comments are closed, but trackbacks and pingbacks are open.