தீப ஒளி திருநாள் இனிப்பு வகைகள்: குலாப் ஜாமூன்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு ஒரே நாள்ல ரெண்டு மூணு ரெசிபி பாக்க போறோம். தீபாவளி வந்தாச்சு. சட்டுனு குயிக்கா செய்ற மாதிரி சிம்பிள் ரெசிபி தாங்க. குலாப் ஜாமுன். வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அன் ஸ்வீட்டட் கோவா 300கி, பன்னீர் 50 கி, மைதா 3 ஸ்பூன், பேக்கிங் சோடா சிறிதளவு, சர்க்கரை 3 கப், குங்குமப்பூ ஒரு சிட்டிகை, ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, கிரஷ்ட் நட்ஸ் ஒரு ஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோவா, பன்னீர், மைதா, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு கடாயில் 3 கப் சர்க்கரை 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். அத்துடன் ஏலக்காய் தூள் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த ஜாமுன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக அழுத்தி தேய்த்து விரிசல் விழாத அளவு உருண்டை பிடித்து காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறித்து சூடான சர்க்கரை பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின் கிரஷ்டு நட்ஸை அதன் மேல் தூவி பரிமாறுங்கள்… என்ஜாய் யுவர் தீபாவளி!
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.