அங்குசம் சேனலில் இணைய

விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுகவின் மருத்துவர் அணி இணை செயலர் டாக்டர் சரவணன், அதிரடியாக பல விவகாரங்களை பேசியிருக்கிறார்.

அவர் பேசியது :

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா. அதேபோல, உலக அளவில் செஸ் போட்டி நடத்தி உலக கவனத்தை ஈர்த்தார். அதேபோல ஒலிம்பிக்கில் பங்குபெற்று வெற்றி பெற்று பரிசுகளை வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு. பரிசுத்தொகையும் அறிவித்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனை தொடர்ந்து எடப்பாடியார் கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எல்லா கிராமங்களிலும் விளையாட்டு மைதானத்தை அமைத்து அதற்கு வேண்டிய உபகரணங்கள் வழங்கினார். அதேபோல, கிராமங்களில் முதலமைச்சருக்கானகோப்பைக்கான விளையாட்டு போட்டியை  நடத்தி அவர்களை மாவட்ட அளவில் தேசிய அளவில், சர்வதேச அளவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க செய்யும் வகையில்  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

மேலும், சர்வதேச அளவில் போட்டியில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல, ஊட்டச்சத்து தொகையை மூன்று மடங்காக உயர்த்தி எடப்பாடியார் வழங்கினார். இதற்கெல்லாம் மேலாக விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார். அந்த வேலை வாய்ப்பைத்தான் உதயநிதி ஸ்டாலின் வழங்கி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்தியாவிலேயே தமிழக விளையாட்டு துறை முதன்மையாக உள்ளது என்று விளையாட்டு துறை அமைச்சர் பேசி வருகிறார். இன்றைக்கு பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் குறைவாக உள்ளது என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியுமா? பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அதிகம் இருந்தால் தான் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுவார்கள். தற்போது தமிழகத்தில் 6000 மேற்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி பற்றாக்குறை உள்ளது.

உதயநிதி
உதயநிதி

குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஒரு அரசாணையை வெளியிட்டார்கள். அதில் 250 முதல் 400 உள்ள மாணவர்களுக்கு ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்ற நிலையை, மாற்றி 700 மாணவர்களுக்கு ஒரு உடற்பயிற் சிஆசிரியர்கள் என்ற அரசாணை கொண்டு வந்தார்கள். அதற்கு தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போதுகூட, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. 250 மாணவர்களுக்கு கீழே இருந்தால், அங்கே உடற்பயிற்சி ஆசிரியர்கள் கிடையாது என்று அரசு கூறிவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, நீதிமன்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியுமா?

234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று கூறினார். இதுவரை எத்தனை தொகுதி அமைத்துள்ளார் என்பதை உதயநிதி ஸ்டாலின் கூற முடியுமா? அதேபோல், மத்திய அரசின் சார்பில் எஸ்.ஜி.ப்.ஐ. சார்பில் 60 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக இரண்டு லட்சம், இரண்டாம் பரிசாக ஒன்னரை லட்சம், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் என்று எடப்பாடியார் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த பரிசு தொகை குறைத்து தற்போது முதல் பரிசு ஒருலட்சம்; இரண்டாம் பரிசு 75,000; மூன்றாம் பரிசு 50,000 என்று மாற்றிவிட்டார்கள். இதுதான் விளையாட்டுத் துறையின் சாதனையா? என்பதை ஸ்டாலின் கூற வேண்டும்.

அதேபோல, சென்னை நகரில் ஆசியன் அத்லெண்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஆசியா நாடுகளை சேர்ந்த பல்வேறு முன்னணி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால், இதில் வீரர்கள் பங்கு பெறுவதற்கு பயணம், தங்கு விடுதி பயிற்சிகள் உடமைகள் ஆகியவைக்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேவையான நிதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சென்னையில் கார் ரேஸ் நடத்த மட்டும் 42 கோடி மக்கள் வரிப்பணம் உள்ளது. ஆனால், இது போன்ற விளையாட்டு வீரர்களுக்கு பணம் இல்லை. இதுதான் இந்த ஆட்சி இலட்சணமாகும். விளையாட்டு வீரர்கள் எதிர்பார்க்கும் எண்ணங்களை நிறைவேற்றாமல், இன்னமும் ஒருவிளையாட்டுப் பிள்ளையாக விளையாட்டு துறை அமைச்சர் உள்ளார்” என கூறினார்.

 

    —  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.