ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள் பின்னணி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இமாச்சல் பிரதேசத்தில் பாலியாண்ட்ரி என்ற பழமையான பாரம்பர்யத்தைப் பின்பற்றி, இரு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இன்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளில், குறிப்பாக கின்னார் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி போன்ற பகுதிகளில் பாலியாண்ட்ரி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த மரபின்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்து, கூட்டாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்த முறை, சமூகம் மற்றும் பொருளாதார காரணங்களால், குறிப்பாக நில உடைமைகளைப் பிரிக்காமல் ஒருங்கிணைத்து வைத்திருக்க உதவுவதாகக் கூறுகின்றனர்.

இமாச்சல் பிரதேச கல்யாணம்திருமணம் குறித்து சகோதரர்களில் ஒருவர் கூறுகையில், “இது ஒரு பரஸ்பர முடிவு, எங்கள் பாரம்பர்யத்தைப் பின்பற்றுவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. இது எங்கள் கலாசாரத்தின் ஒரு பகுதி, இதை நாங்கள் மனதார கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தத் திருமண முறை பழங்கால பாரம்பர்யத்தைப் பின்பற்றுவதாகவும், தங்கள் கலாசாரத்தைப் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அந்தச் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இமாச்சல் பிரதேச கல்யாணம்குறித்து பேசி இருந்த மணமகளும், ”நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை. இந்த மரபை ஏற்று, குடும்பத்துடன் இணைந்து வாழ எனக்கு மகிழ்ச்சி” என்றும், மூன்று நாள்கள் நடக்கும் இந்தத் திருமணச் சடங்குகளில் பக்கத்துக் கிராமத்திலிருந்து பல கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குப் பாரம்பர்ய டிரான்ஸ்-கிரி உணவு வழங்கியதாக தெரிவித்தார்.

  —  மு.குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.