அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

3 முறை இல்லை 33 முறை வந்தாலும் ஹிந்தியை திணிக்க முடியாது ! வைகோ

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரை மண்டல மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக்கழகம் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்ததாவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக இங்கு நிதிதிரட்டுகின்ற பணிக்கு தற்போது மண்டல வாரியாக நான் மட்டும் தலைமை நிர்வாகிகள் நிதி திரட்டி வருகிறோம்.

தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கக்கூடும் ஒரு நாள் தேர்தலாக தான் இருக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் வருவதாக தெரிகின்றன. இந்த தேர்தல் மிககடுமையாக இருக்கும் என சிலர் ஏடுகளில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நாம் எதிர்கொண்டு உள்ள சட்டமன்ற தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட கழகம் எத்தனை இடங்களில் போட்டியிடும் என கோவை மற்றும் ஈரோட்டில் கேட்டபோது அது பேச்சுவார்த்தை குழு  அமைக்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்திடம் சென்று பேசிய பின்பு தான் எத்தனை தொகுதி கெடுக்கிறோம் என முடிவெடுக்க நேரிடும் என சொன்னேன்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதுவே தேர்தல் முடிவாகஅமையும் என எனது கருத்து கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. திமுக தனது பெரும்பான்மையோடு அமைக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் அந்த அரசுக்கு பக்கபலமாக அரசியல் செய்யும், இதே நிலைமை தொடரும் என்பதுதான் என்னுடைய கணிப்பு. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20 ஆண்டுகள் இடைவிடாது போராடிய போராட்டங்கள் மக்கள் நலன் விவசாய நலன் சுற்றுச்சூழல் நிலைமையை பார்த்துதான் இந்த போராட்டங்களில் நான் ஈடுபட்டேன். அதன் பின்பாக உச்ச நீதிமன்றத்தில் தடையானையும் பெற்றேன். இந்த ஸ்டெர்லைட்டை திரும்ப கொண்டு வதற்காக ஸ்டெர்லைட் கிரீன் என்ற பெயரில் திரும்பவும் திறப்பதற்கு தயார் செய்து வருகின்றனர். இதை தொடக்கத்திலேயே தடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் வாரியம் இதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாரதிய ஜனதாகட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை உட்பட தமிழகத்தில் எங்கே எந்த   சம்பவம் நடந்தாலும் அதில் இந்துத்துவ கொள்கையை திணிப்பதாக அவர்கள் பழியைபோடுவதும் மதமாற்றம் செய்வதை முயன்றார்கள் என சொல்வதும் நோக்கமாக இருந்து வருகின்றனர். மதமாற்றம் செய்யவே இந்த மாணவி இறப்பதற்கு காரணம் என பொய்யான குற்றச்சாட்டை எழுப்பிய பாஜகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவாக ஏற்கனவே இருந்த திமுக இதனால் இன்னும் பல பெரும் தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என கூறி வந்தேன். இப்போது எங்கள் கூட்டணி மேலும் மேலும் பலம் பெற்றுள்ளது. இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

மாணிக்கம் தாகூர் கடுமையாக பேசுகிறார். நான் திருப்பி அடிப்பேன் என்ற கருத்தை எல்லாம் தெரிவித்து வருகிறார். செல்வப் பெருந்தகையும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்கிறார். காங்கிரஸ் கட்சியில் எதிர்குரல் அவர்களுக்குள் பிரச்சனை வரும், அது உட்கட்சி விவகாரம் இது திமுக பொருட்படுத்தாது பாரதிய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் பிடித்தவர் திருக்குறளை ஹிந்தியில் எழுதி வைத்துக்கொண்டு பேசும் அவர், ஹிந்தி திணிக்க மாட்டோம் . தமிழுக்கு முன்னுரிமை கொடுப்போம் என தெரிவிக்கவில்லை.  தமிழகத்திற்கு அவர் 3முறை இல்லை 33 முறை தமிழகம் வந்தாலும் ஹிந்தியை இங்கே திணிக்க முடியாது. அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு செல்வது ஒரு சதவீதம்கூட திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

விஜய் அதிக வாக்குகள் வாங்குவார்கள் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே கருத்து தெரிவித்து வருகின்றனர் என கேட்டபோது.. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஒரே நேரத்துல 9 குரல் கொடுப்பார்கள் அதைப் பற்றி நான் இப்ப பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.