பொய்யான தகவலை பரப்பும் மதுரை ஆதினம் ! இந்து மக்கள் கட்சி கண்டனம்….
மதுரை ஆதின மடத்தை களங்கப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதினம் பதவி நீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிக்கை!…
சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்க்கு செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்க்கு காரணம் நம்பர் பிளைட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், ரெம்ப தூரம் துரத்தி வந்து பேரி கார்ட்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள் என்றும், நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பார்கள் ஆனால் மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் அதினமாகிய என்னை கொல்ல சதி என்றும் மதுரை ஆதினம் மீடியாக்களிடம் பேட்டி அளித்திருந்தார். அதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் காவல்துறை மூலமாக தற்பொழுது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ CCTV யை வெளியிட்டு தற்போது வைராலாகி உள்ளது அந்த வீடியோவில் மதுரை ஆதினம் வந்த வாகனமும், ஆதின வாகனத்தின் மீது மோதிய வாகனமும் இரு வழி பாதையில் வரும் போது நான்கு வழி சாலை பிரிவு சந்திப்பில் ஆதினம் கார் பின்னால் வந்த வாகனம் லேசாக உரசி உள்ளது என்று அந்த வீடியோவை உற்று ஆய்வு செய்யும் பொழுது உண்மை நிலை நன்றாக தெரிய வருகிறது.
இதில் ஆதினம் வந்த வாகனம் மிக வேகமாக சென்ற பொழுது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே இதனை பெரிய பிரச்சனை ஆக்கி என்னை கொல்ல சதி தாடி வைத்து குல்லா போட்ட மத தீவிரவாதிகள் சதி திட்டமிட்டுள்ளார்கள் என்று மதுரை ஆதின மடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும்மத பிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் மதுரை ஆதினமாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விசப் பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கிய 293வது மதுரை ஆதினமாக இருக்கும் ஞானசம்பந்த தேசிய பரமாச்சியாருக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. மத தீவிரவாதிகள் மதுரை ஆதினத்தை எதற்காக கொல்ல வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து அப்படி என்ன ஆதினம் பேசி விட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தீவிரவாதிகள் கொல்ல வேண்டுமென்று நினைத்தால் இப்படி அறையும் குறையுமாக சிறிய விபத்தை ஏற்படுத்தி விட்டு செல்ல மாட்டார்கள். யாரையாவது கொல்ல வேண்டுமென்று மததீவிரவாதிகள் நினைத்தால் அவர்களை குறி வைத்து கொன்று விட்டுத்தான் செல்வார்கள். அதற்கு உதாரணம் இந்து இயக்கத்தலைவர்கள் படுகொலை. பஹல்காம் தாக்குதல் என் வாகனத்தின் மீது இடித்தவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் தப்பி சென்று விட்டார்கள் என்று கூறும் ஆதினம் அவர்கள் தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதினத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது.
மதுரை ஆதினத்தின் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதினத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது. மதுரை ஆதினம் அவர்கள் ஒரு மதத்தின் மீது பழி போட்டு ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டால் மதுரை ஆதின மடத்திற்க்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது.
இதற்கு முன்பாக ஆதினத்தின் டிரைவர் மீதும், குத்தகைதாரர்கள் மீதும் என்னை கொல்ல சதி நடக்கிறது என்று இதே ஆதினம் கொலை குற்றச்சாட்டு கூறினாரே தவிர இந்த கொலை மிரட்டல் சம்பந்தமாக யார் மீதும் இதுவரையில் முறையாக காவல்துறையிடம் மதுரை ஆதினம் புகார்களை அளிக்க வில்லை.
இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதினமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. காவல்துறை பாதுகாப்பிற்காகவோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ மதுரை ஆதினத்தை பின்னால் இருந்து தவறாக யாரெனும் இயக்குவது போல் தெரிகிறது.
மதுரை ஆதினத்திற்க்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது. கடந்த 2012ல் நித்தியானந்தாவை 293வது ஆதினமாக நியமிக்கும் பொழுது அதனை எதிர்த்து ஒரு வருடமாக போராடி மதுரை ஆதினமடத்தை விட்டு நித்தியானந்தாவை கஷ்டப்பட்டு வெளியேற்றினோம்.
அதன் பிறகு 292வது சன்னிதானம் இறக்கும் பொழுது மதுரை ஆதினமடத்திற்க்கு 293வது சன்னிதானமாக இவர் தான் வரவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவளித்தோம். ஆனால் மதுரை ஆதினத்தின் நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் நாங்கள் மடத்திற்க்கு செல்வதை நிறுத்தி விட்டோம்.
மேலும் மதுரை ஆதினமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதினமடத்தில் தினந்தோறும் அன்னதானம் போன்ற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமாலும் ஆதின மடத்தை மின்சார சிக்கனம் என்று ஆதின மடத்தை இருளில் போடுவதும், மடத்திற்க்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும், மதுரை ஆதினமாக பதவி நியமனம் செய்த திருவாவடுதுறை ஆதினத்தையும், தர்மபுர ஆதினத்தையும் கேவலமாக பேசுவதும். பிராமண சமூகத்தையும், அர்ச்சகர்களையும் அசிங்கமாக இழிவு படுத்தி பேசுவதும், மடத்திற்க்கு ஆசி வாங்க வரும் பக்தர்களை அவமரியாதை செய்வதும், மடத்தின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை, ஒத்திக்கு இருக்கும் நபர்களிடம் பாதகாணிக்கை என்ற பெயரில் லட்ச கணக்கில் வசூலிப்பதும்,
அரசியல்வாதிகளை போல் அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பு மற்றும் பொது மேடையில் தான் தோன்றி தனமாக வாய்க்கு வந்த படி சர்ச்சையை உண்டாக்கும் வகையில் பேசுவதும்,
பிறகு அதனை மறுப்பதும், அமைச்சர் சேகர்பாபுவை சினேக் பாபு என்று நக்கலடித்து பேசுவதும் பிறகு சேகர்பாபும் நானும் நண்பர்கள் என்று கூறுவதும், மடத்திற்க்கு வருபவர்களை முன்னால் விட்டு பின்னால் அவர்களை தவறாக பேசுவதும், சித்திரை திருவிழா நடந்து கொண்டிருக்கின்ற இவ்வேலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வீதி உலா வரும்பொழுது சிவனடியார்கள் சிவ வாத்தியம் அடித்து விட்டு மடத்திற்க்குள் சிவனடியார்கள் கொண்டு வந்த உணவு சாப்பிட கூட அனுமதி மறுப்பதும்,
மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடக்கும் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு ஒரு பச்ச தண்ணீர் கூட மடத்தின் சார்பாக கொடுக்க மறுப்பதும், மதுரை ஆதின மடத்தை வணிக வளாகமாக மாற்றுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக மதுரை ஆதினத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வருகிறது.
1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான சுவாமி திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதினமடத்தின் 293வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசமயாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதினம் அவர்களையும், அவருடன் உடன் வந்தவர்களையும், வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும்,தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்.

சமீபகாலமாக மதுரை ஆதினமடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும் மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதினம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிய வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதினமாக இருக்க தகுதியற்றவர்.
எனவே மதுரை ஆதினமடத்திற்க்கு இந்து சமய வளர்ச்சிக்காகவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும், இந்துசமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள் செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதினமடத்தின் சொத்துக்களையும், ஆதினமடத்தின் புகழையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு. மதுரை ஆதின மரபுகளை மீறி தான்தோன்றி தனமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் மதுரை ஆதினமாக செயல்படும் 293வது திருஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியராக மதுரை ஆதினமடத்தில் மடாதிபதியாக வகிக்க தகுதியற்றவர்.
அவரை உடனடியாக மதுரை ஆதினம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென விரைவில் இந்து மக்கள் கட்சி ஏற்பாட்டின் பேரில் அனைத்து இந்து அமைப்புகளையும், சைவ ஆதினங்களையும் ஒன்றிணைத்து ஆலோசணை கூட்டம் நடைபெறும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தெரியபடுத்தி கொள்கின்றோம் என இந்து மக்கள் கட்சி, மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் கூறுகிறார்.
— ஷாகுல், படங்கள்:ஆனந்தன்.