அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் – செஞ்சுருள் சங்கம் தொடக்க விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் தொடக்க விழா ! புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 11/07/2024 அன்று அன்னை சோஃபி அரங்கில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பெ . இராமஜெயம்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். நாட்டு நலப் பணித் திட்டத்தில் மாணவர்களின் சேவை குறித்தும், உலகமயமாக்கல், சந்தைப்படுத்துதல், ஊடக உலகம் குறித்தும், புற்றுநோய், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு விதமான கருத்துக்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் உரையாற்றினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

Holy Cross Autonomous College
Holy Cross Autonomous College

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி  தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.

https://www.livyashree.com/

இளங்கலை, இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டு நலப் பணித்திட்ட உறுதி மொழியினையும், ( 11/07/2024 ) அன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அதற்கான உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

Holy Cross Autonomous College
Holy Cross Autonomous College

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா, திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, முனைவர் மரிய ஷீலா மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் பபித்ரா, முனைவர் அகிலா அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.