கேட்காமல் பணம் வழங்கிய ஏடிஎம்! நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!
ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக வெளியே வந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நபரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே இயங்கி வரும் Hitachi ATM-ல் கடந்த 15.01.2026 அன்று மாலை 4 மணியளவில் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் (வயது 65)என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தன்னிச்சையாக ரூபாய் 72,300 பணம் வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அன்புச்செல்வன் பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனை அடுத்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னர் கல்லாத்தூர் பேருந்து நிலையத்தில் செயல்படும் Hitachi ATM-யை நிர்வகிக்கும் பொறுப்பாளர் திருமதி.தேன்மொழி என்பவரிடம் பணத்தை ஒப்படைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 20.01.2026 இன்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அன்புச்செல்வன் அவர்களின் நேர்மையை பாராட்டி 10 கிராம் வெள்ளி நாணயத்தை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் தலைமை காவலர் விஜயகுமார் உடன் இருந்தார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.