அங்குசம் சேனலில் இணைய

நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உசிலம்பட்டி அருகே அரசு தொழில் நுட்ப கல்லூரி விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி மாணவர்கள் ராக்கிங் செய்து தாக்கி வீடியோ வைரலான சூழலில் சகமாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை, விடுதி காப்பாளரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அரசு கள்ளர் மாணவர் விடுதி
அரசு கள்ளர் மாணவர் விடுதி

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70  மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி விடுதியில் தங்கி இருந்த மாணவனை சகமாணவர்கள் நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து தாக்கிய வீடியோ வைரலாகி பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 3 மாணவர்கள் மீது செக்காணூரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

செக்கானூரணி காவல் நிலையம்
செக்கானூரணி காவல் நிலையம்

மேலும் கவனக் குறைவாக இருந்ததாக விடுதி காப்பாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து, கள்ளர் சீரமைப்புத்துறை சார்பிலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  –ஷாகுல், படங்கள்: ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.