100 ரூபாயை வைத்து வீடு வாங்கினால் எப்படி இருக்கும் !
தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் விலைவாசிக்கு 100 ரூபாயை வைத்து ஒரு நாளை ஓட்டுவதே மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. ஆனால் அந்த 100 ரூபாயை வைத்து வீடு வாங்கினால் எப்படி இருக்கும், ஆம் மிகவும் ஆச்சரியம்தான். ஆனால் இது போன்ற சம்பவங்களும் ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அம்பர்ட் நகரத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதால், அதை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக 1 யூரோவிற்கு தோராயமாக இந்திய ரூபாயில் 100 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்யும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட வெறும் 6500 மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நகரத்தில் புதிய மக்களை ஈர்க்கும் விதமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் பல தனித்துவமான நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் செல்லுபடியாகும். ஏற்கனவே வீடு வைத்திருப்பவர்கள் அல்லது இரண்டாவது வீடு வாங்குபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்க முடியாது.
குறிப்பாக வாங்கிய வீட்டை வாடகைக்கு விட அனுமதி இல்லை, இந்த வீட்டை வாழ்வதற்கு வாழ்வதற்கு தகுந்தாற்போல் புனரமைப்பு செய்த பின் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வாழ வேண்டும், இந்த நிபந்தனையை மீறினால் வீட்டின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படுமாம், இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கும் வீடுகள் பெரும்பாலும் சேதம் அடைந்து மோசமாகத்தான் இருக்கும்.
வீட்டை ஒரு யூரோவுக்கு வாங்கினாலும் வீட்டை வாழ்வதற்கு ஏற்ப சுவர்கள் மற்றும் கூரைகள் பழுது பார்ப்பது, வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது தரைகளை சரி செய்வது மின் இணைப்பு சீரமைப்பது உள்ளிட்டவை செய்தாலே பல லட்சம் செலவாகலாம். இருப்பினும், இதில் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்காக பலர் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு வாங்க யோசிக்கின்றனர். மேலும் இதுபோன்று வீடுகள் 100 ரூபாய்க்கு நம் இந்தியாவிலும் வந்தால் எப்படி இருக்கும் என்று உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்!