தவறி விழுந்த பெண்! 54 மணிநேரம் கிணற்றில் ! உயிர் பிழைத்தது எப்படி?
சீனாவின் புஜியான் மாகாணத்தை சேர்ந்த 48 வயதான ஜின் என்ற பெண் காட்டுப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்றிருக்கும்போது ஒரு பழைய கைவிடப்பட்ட ஆழமான கிணறு ஒன்றில் தவறுகளாக விழுந்திருக்கிறார். இந்த நிலையில் மறுநாள் ஆகியும் வீடு திரும்பாத ஜின் காணாமல் போய் இருக்கலாம் என்று எண்ணி அவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து மீட்டு குழுவுடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்ற போலீசார். ட்ரோன் உதவியுடன் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின் காட்டிற்கு நடுவே உள்ள ஒரு கிணற்றின் சுவரைப் பிடித்து ஒட்டிக்கொண்டு பார்த்திருக்கின்றனர், உடனே அங்கு சென்ற மீட்பு குழுவினர் சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஜினை கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சிகிச்சைக்கு பின் இது குறித்து ஜின் பேசுகையில் “நான் அந்நேரம் விரக்தியடைந்து முற்றிலும் உடைந்து போன தருணங்கள் இருந்தன. நான் கிணற்றின் சுவரை விட்டுவிடலாம் என்று பலமுறை நினைத்தேன், ஆனால் பின்னர் என் அம்மா, அப்பா, கல்லூரியில் சேரத் தொடங்கிய என் மகள் ஆகியோரை யோசித்து விடாமல் அந்த சுவரைப் பற்றிக் கொண்டு இருந்தேன். கிணற்றின் அடிப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது. கொசுக்கள் நிறைந்திருந்தன.
அருகிலேயே சில நீர் பாம்புகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு முறை நீர் பாம்பு என் கையில் கடித்தது. ஆனால் அது விஷம் அல்ல. எந்த தீங்கும் ஏற்படாமல் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன்” என்று கூறியிருக்கிறார். அவர் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார்.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.