துறையூர் அருகே உள்ள சோபனாபுரம் கிராமத்தில் கணவன் மனைவி கொடூரமான முறையில் கொலை !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சோபனாபுரம் கிராமத்தில் கணவன் மனைவி கொடூரமான முறையில் கொலை
எஸ் பி சுஜித்குமார் நேரில் விசாரணை .
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி..மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன் ராஜ்குமார். இவரது மனைவி சாரதா (19) இவர்கள் இருவரும் சோபனபுரத்தைச் சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
ராஜ்குமார் தனது மனைவி சாரதாவுடன் விவசாய நிலத்தின் அருகே உள்ள பண்ணை வீட்டில் தங்கி கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். மேலும் டிராக்டர் ஒன்றை சொந்தமாக வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது என கூறப்படுகிறது குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று 02.07.2023 தனது சொந்த ஊரான பி.மேட்டூருக்கு சென்று இருந்த ராஜ்குமார் இரவு சோபனாபுரத்திற்கு வந்து அங்கு உறவினர் வீட்டில் தங்கி இருந்த மனைவி சாரதாவை அழைத்துக் கொண்டு விவசாய நிலத்தில் தான் தங்கியுள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் 03.07.2023 மதியம் விவசாய நிலத்தின் உரிமையாளர் விஜயசேகரன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் அப்போது கொடூரமான நிலையில் கணவன் மனைவி இருவரும் கட்டிலில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .உடனடியாக இதுபற்றி உப்புலியபுரம் காவல்துறைக்கு அவர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் மற்றும்போலீசார் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். எதற்காக கொலை நடைபெற்றது? நகைக்காகவா அல்லது முன்விரோதமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவம் நடந்த வயலுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் கூட்டமாக உட்கார்ந்து மது அருந்துவதாகவும் , சம்பவம் நடந்த நேற்று 02.07.2023 இரவு கூட மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இது பற்றி உப்பிலியபுரம் போலீசில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையை அப்புறப்படுத்தக் கூறி பொதுமக்கள் போராட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கள்ள லாட்டரி, கஞ்சா விற்பனை, கலப்பட மது விற்பனை, சந்துக் கடைகள், கனிம வளக் கொள்ளை.
உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதிகளாக உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாறி வருகிறது.வெட்ட வெளிச்சமாக இது போன்ற செயல்கள் நடைபெற்றாலும் உப்பிலியபுரம் போலீசார் எதையும் கண்டுகொள்ளாமல் கடமையே கண்ணாக இருந்து வருகிறார்கள். இளம் வயது கணவன் மனைவி மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.