அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள்… சட்டவிரோத பட்டாசு ஆலைகள்… அமைதி காக்கும் அதிகாரிகள்…

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – சிவகாசி, வெம்பக்கோட்டை விருதுநகர், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொடர் விபத்துகள், கைது நடவடிக்கைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகாரிகளின் கண்காணிப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

லைசென்ஸ் பெற்று, கடுமையான விதிமுறைகளுடன் செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தி, இன்று தோட்டங்கள், வீடுகள், கடைகளின் பின்புறம், காடுப்பகுதிகள், சாலை வசதி இல்லாத இடங்கள் வரை பரவியுள்ளதே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மாவட்டம் முழுவதும் நிறைய சம்பவங்கள் நடந்து இருந்தாலும் ஒரு சில சம்பவங்கள் இதோ,

சட்டவிரோத தொழிற்சாலைகள்சாத்தூர் அருகே சிறுக்குளம் பகுதியில், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மனைவிக்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த ஒரு வருட காலமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க தேவையான கருந்திரி தயாரிக்கப்பட்டபோது மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிகுல் அலி (13), செய்யது உசேன் (14) ஆகிய இரு சிறுவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்த சம்பவம் தொடர்பாக அப்பையநாயக்கன்பட்டி போலீசார் தோட்ட உரிமையாளர் கவிதா, அவரது கணவர் சரவணகுமார், சூப்பர்வைசர் பெருமாள் உள்ளிட்ட மூவர்மீது வழக்குப்பதிவு செய்து, சரவணகுமார் (48), பெருமாள் (36) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத தொழிற்சாலைகள்இதேபோல், கோனம்பட்டி விலக்கு பகுதியில் தனியார் பட்டாசு கடையின் பின்புறம் தகர செட் அமைத்து, அரசால் தடை செய்யப்பட்ட அடியாள் வெடிகள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வந்தது போலீசார் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதில் மீனம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (23), ஜெயதனு (25), பவுன்ராஜ் (33) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 14 பெட்டிகள் அடியாள் வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மேட்டமலை பகுதியில் உள்ள கவின் பயிரோடெக் மற்றும் எல்.கே.எஸ். டிரேடர்ஸ் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினர், பேன்சி ரக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மணி மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை சட்டவிரோதமாக காயவைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த நபர்கள்
சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த நபர்கள்

இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் அபினேஷ், கணேசன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு சம்பவமாக, வெம்பக்கோட்டையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்திருந்த குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் திருட்டு போனது கண்டறியப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு செய்ய சென்ற நீதிமன்ற தலைமை எழுத்தர், குடோனில் இருந்த பட்டாசுகள் மாயமாகியிருப்பதை உறுதி செய்தார். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் குடோன் உரிமையாளர் கணேச பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சீல் வைத்த குடோனிலேயே பட்டாசுகள் பாதுகாப்பில்லாமல் இருப்பது, அதிகாரிகளின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது.

 சட்டவிரோத தொழிற்சாலைகள்மூலப்பொருள் எங்கிருந்து வருகிறது?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் புதிதாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பலர் லைசென்ஸ் பெற்று முறையாக விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலர் பேராசையால், உயிருக்கு மிக ஆபத்தான ரசாயன மூலப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அளவு அபாயகரமான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

அவற்றை கண்காணிக்க வேண்டிய துறைகள் என்ன செய்து வருகின்றன?

என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது.

அரசியல் அழுத்தமும் தளரும் நடவடிக்கையும்

சில இடங்களில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி கண்டுபிடிக்கப்படும் போதும், அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மூலப்பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல், அவை மீண்டும் சம்பந்தப்பட்ட நபர்களிடமே செல்லும் நிலை உருவாகுவது, சட்டத்தின் மீது நம்பிக்கையை குலைக்கிறது.

சட்டவிரோத தொழிற்சாலைகள்எச்சரிக்கையாக மாறும் நிலை

ஒரு சிலரின் தவறான செயலால், ஒட்டுமொத்தமாக முறையாக பட்டாசு விற்பனை செய்து வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அல்ல, சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவே மாறிவிடுமோ என்ற அச்சம் வலுக்கிறது.

சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை கட்டுப்படுத்த,

மூலப்பொருள் விநியோகத்தில் கடும் கண்காணிப்பு, தொடர்ச்சியான திடீர் சோதனைகள், அரசியல் தலையீடு இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பாதுகாப்பு, ஆகியவற்றை அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உயிர்கள் பலியாகிய பிறகாவது, சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வியே, மக்களின் மனதில் ஒலிக்கிறது.

—   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.