அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் !

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் MLA அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

முதலில், தோட்டிலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடக்க விழாஅடுத்து பேரையம்பட்டி – சிவனணைந்தபுரம் பகுதியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பின்னர் கரிசல்பட்டி – சண்முகாபுரம் பகுதியில், கனிம வள நிதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடக் கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

https://www.livyashree.com/

வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடக்க விழாஇறுதியாக சிந்தப்பள்ளி கிராமத்தில், ஒன்றிய பொது நிதியின் மூலம் ரூ.18.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜாமணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகப்பிரியா, மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

   —   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.