தேனி – கேரள மாநிலத்திற்கு முறைகேடாக கடத்தப்படும் மற்றொரு கனிம வள திருட்டு !
பல்வேறு முறைகேடுகள் செய்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்க வேண்டுமென அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு பல்வேறு விதமான முறைகேடுகள் செய்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18.02.2025 நாட்களுக்கு முன்பு தமிழக கேரளா எல்லையான கம்பம் மெட்டு காவல் சோதனை சாவடி முன்பாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சாலை மறியலை நடத்தியது.
இதில் கேரளா எல்லையில் லாரி டிரைவர் கேரளா காவல் துறையால் தாக்கப்பட்டதாகவும் அதை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
தாக்கப்பட்ட லாரி டிரைவர் ஓட்டிச்சென்ற லாரி தமிழகத்திலிருந்து கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனம் அதில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் காவல்த் துறைக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத நிலையில் லாரி டிரைவர் மீது வழக்கு போடப்பட்டது.
இங்கிருந்து செல்லும் கனரக வாகனங்கள் முறையான அனுமதி சீட்டோ GST வரி உட்பட்ட எவ்விதமான ஆவணமின்றி இரவு நேரங்களில் செல்வதால் அதை கண்காணிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை அங்கு இருப்பதில்லை. அது சமயம் நாள் ஒன்றுக்கு 5 நடைகள் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கையில் வைத்திருக்கும் நடைச்சீட்டோ ஒரு நடைச்சீட்டு மட்டுமே வைத்துக் கொண்டு 5 நடை ஒட்டப்படுகிறது.

ஆகையால் காவல்த்துறை சோதனைச் சாவடி சரியாக சோதனை செய்யாத கரணத்தால் 5 யூனிட் ஏற்றுவதற்கு பதிலாக 8 யூனிட் ஏற்றப்படுகிறது.
தமிழகத்திற்க்கான கனிம வளத்தை அண்டை மாநிலங்களான கேரளாவில் கொள்ளையடித்து செல்லப்படுகிறது. தமிழ அரசுக்கு உரிய பணம் கட்டாமல் நிதி இழப்பை உண்டாக்குகிறது.
இதை சரி செய்யும் விதமாகவும் மற்றும் தேனி மாவட்டத்தில் அரசு அனுமதியோடு நடைபெறுகிற மண் மற்றும் கிராவல் குவாரிகள் கல் குவாரிகள் அனுமதித்த அளவை மீறி அளவுக்கு அதிகமாக ஆழமாக கனிம வளங்களை தோண்டி எடுக்கப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அது மட்டும்மல்லாது ஆவணத்தில் உள்ள இடத்தில் இல்லாமல் மாற்று பட்டா நிலங்களின் கனிம வளங்கள் சுரண்டப்படுகிறது.
இதை ஆய்வுக்குட்படுத்தாத புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இருப்பதனால் தனி நபர் அரசின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
தனி நபரின் வருமானத்தை பெருக்குவதற்கு அரசு குவாரி அனுமதி தருகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.
ஆகையால் புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுமதியின்றியும் மாற்றுப்பட்டாக்களில் அள்ளும் உரிமத்தை ரத்து செய்து அல்லிய நபர்கள் மீது பாஸ் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவதாரத் தொகை வசூலிக்க வேண்டும்மென்று அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதே நிலை தொடரும் பட்ச்சத்தில் இயக்கத்தின் சார்பாக குவாரிகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகையால் தவறாக நடப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்மாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது,
— ஜெய்ஸ்ரீராம்.