IND Vs SL சூப்பர் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்!
இந்திய உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற 17-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்ப பரீட்சை செய்தனர். ஏற்கனவே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஃபுல் மீல்ஸ் ஆக தான் அமைந்தது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஓவரில் பல சுவாரஸ்யங்கள் நடந்தது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில் சூப்பர் ஓவரில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார் கீப்பர் பந்தை ஸ்டம்ப்பில் அடித்து அவுட் ஆகிவிட்டார் அதனால் இது அவுட் என்று நாம் அனைவரும் நினைத்தோம். உண்மையில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் பார்த்த இரு வீரர்களும் அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தார்கள்

ஆனால் பேட்ஸ்மேன் உடனடியாக அப்பீல் செய்து இதனை தனக்கு வசமாக பயன்படுத்திக் கொண்டார் . அது எப்படி என்றால் பவுலர் பந்து வீசிய பின்பு அம்பையரிடம் கேட்க்காக முறையிட்டதாக தெரிகிறது. அப்போது பேட்ஸ்மேன் ரன் ஓட ஆரம்பித்து விட்டார். அதாவது பந்து பேட்டில் பட்டு விட்டதாகவும் அதனால் ரன் ஓட ஆரம்பித்ததால் என்று பேட்ஸ்மேன் கருதி அம்பையரிடம் மேல்முறையீடு செய்தார். இதனை சரிபார்த்தபோது பந்து பேட்டில் சுத்தமாக படாமல் சென்று விட்டது. இதனால் பவுலர் தான் முதலில் எதற்காக அம்பையரிடம் முறையிட்டாரோ அந்த முறையில் பேட்ஸ்மேன் அவுட் ஆகாமல் இருப்பது தெரிய வந்ததன் விளைவாக இந்த ரன் அவுட் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாக லெக் அம்பயர் அவுட் என கூறியதும் அங்கே பரிசீலனை செய்யப்படவில்லை மெயின் அம்பையர் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டு முதலில் எதற்காக அப்பீல் செய்தார்களோ இந்திய வீரர்கள் அந்த விக்கெட் கிடைத்திருக்கிறதா என்று பாருங்கள் என செக் செய்த போது பந்து பேட்டில் படாமல் சென்றதால் இது ரன் அவுட் என எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஏனென்றால் கேட்ச் என கேட்டதற்கு நீங்கள் அவுட் கொடுத்து விட்டதால் நான் ரன் ஓடாமல் அப்படியே நின்று விட்டேன். இல்லையென்றால் ஒரு ரன் ஓடி முடித்திருப்பேன் என்று பேட்ஸ்மேன் கூறுவதாக இதன் பொருள் இப்படிப்பட்ட ரீவிவ் வெற்றிக்கு பின் அடுத்த பந்தை சந்தித்த வீரன் கேட்ச் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.