இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் ! மதுரை ஆதீனம் பேட்டி..
இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன் மதுரை ஆதீனம் பேட்டி..
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை ஆதீனம் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில் …
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடுகளை பலியிடுவது குறித்த கேள்விக்கு. நமது சமயம் என்ன கூறுகிறது என்றால் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பே சிவம் எனக் கூறுகிறது. உயிர் வதம் செய்யக்கூடாது. உயிர் வதம் செய்வது மகா பாவம் என்றார்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடு, அது நமது புராணம் சொல்கிறது யார் யாரோ என்னென்ன சொல்வது அதை ஏற்றுக்கொள்ள முடியாது. முஸ்லிம் மதமும், கிறிஸ்டின் மதமும் வெளியே இருந்து வந்தவர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தன் மதத்தை வழிபட செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எங்களது வழக்கம். மலை உச்சியில் ஏற்றுவது தவறில்லை.. நாங்கள் ஒன்றும் சவூதி அரேபியாவில் சென்று ஏற்றவில்லையே என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இலங்கை மீனவர்களை கைது செய்த காரணம் கச்சத்தீவு தான். இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள் அதற்கு காரணம் ராஜீவ் காந்தி அரசுதான். எனவே, இந்தியாவில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்க விடக்கூடாது. ஆனால் மோடி அரசு இலங்கை வாழ் தமிழா்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளனர்.
கச்சத்தீவை மீட்பதற்காகவும், இலங்கையில் தமிழா்களுக்கு தனிநாடு அமைத்து தர வேண்டும் என்பதற்காகதான் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழர்களுக்கு குரல் கொடுத்தே தீர வேண்டும் என்றார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.