தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்புப் பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!
பேரவையின் மாநிலத்தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் தலைமையில் காரைக்குடி சித்தி வயலில் இன்று (23.01.2026 ) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்எம் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றியதோடு பொறுப்பாளர்கள் அனைவரையும் நல்ல ஆடை அணிவித்து அறிமுகம் செய்து வைத்தார்..
மாவட்டத் தலைவராக டாக்டர். கரு. சண்முகசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்டார். மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களாக சுப. கணேச பாண்டியன் எஸ். கணேச குருக்கள் உ. பழனியப்பன் பி. செல்வம். தனபால்ஸ்தபதியார் மற்றும் இணைச் செயலர் களாக செயற்குழு உறுப்பினர்களாக 20 உறுப்பினர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களாக மாநிலத்தலைவரால் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
புதிய பொறுப்பாளர்களை வரவேற்று மாநில அவைத்தலைவர் கவிஞர். க. சொக்கலிங்கம் அவர்கள் பொறுப்பாளர் களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்லுரை நிகழ்த்தினார்.
மாநில அமைப்பின்சார்பில் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் எஸ். எம். டி முகேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதிக்குமார் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் குணசீலம் வைகானச.கே.ஆர் பிச்சுமணிக்குரூக்கள் சென்னை சக்திபோகர்தாசன் திரு. சுவாமிகள் புவனேஸ்வரிபீடம் கயிலை புனிதர் கணேசக்குருக்கள் ஆசியுரை வழங்கினர். பொருளாளர் வி. வி. கே ஆர். முருகையா நன்றி கூறினார்.
பேரவையின் துவக்க விழாவினை பிள்ளையார்பட்டி. கற்பக வினாயகர் ஆலயம் முன்பு நடத்துவதற்கான ஏற்பாட்டினை மாவட்ட அமைப்பாளர் எஸ். ஆர் எம். பாலசுப்பிரமணியன் அவர்கள் செய்வதாகக் கூட்டத்தில் அறிவித்தார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.