அங்குசம் சேனலில் இணைய

உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான்?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இப்போ இருக்கிற காலகட்டத்துல அவன் அவன் ஒரு டிகிரி முடிக்கிறதுக்குள்ளேயே போதும் போதும் ஆகிறது, ஆனா நான் சொல்ல போற ஒருத்தங்க பாத்தீங்கன்னா உலகத்திலேயே அதிகமா படிச்சிருக்கிறாராம். அதுவும் இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னா நீங்க வியந்து போய்விடுவீர்கள். ஆம்  அவர் தான் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியேரா லியோனிக் குடியரசைச் சேர்ந்த 70 வயதான அப்துல் கரீம் பங்குரா. இவரால் உலகில் உள்ள 18 மொழிகளை  ரொம்ப சாதாரணமாக பேசக்கூடியவராம், அதுபோக 5 பிஎச்டி பட்டங்களையும் இவர் வாங்கியிருக்கிறார்.

அப்துல் கரீம் பங்குரா
அப்துல் கரீம் பங்குரா

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பள்ளிப்படிப்பை ஆப்பிரிக்காவில் முடித்த  பங்குரா சில காலங்களுக்கு பிறகு அமெரிக்காவில் குடியேறுகிறார். அனைத்து சப்ஜெக்ஸ்ட்களையும் கரைத்து குடிக்கும் திறமையுள்ள இவர் டீச்சர், சயின்டிஸ்ட் என எல்லா விதமான வேலைகளும் பார்த்திருக்கிறார். இதுவரை 250 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 35 புத்தங்கங்களும் எழுதியிருக்கிறார். பொலிட்டிகல் சயின்ஸ், கம்பியூட்டர் சயின்ஸ், எக்கனாமிக்ஸ் இப்படி  ஐந்து துறைகளில் பி.எச்.டி பட்டமும் வாங்கியிருக்கிறார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அப்துல் கரீம் பங்குரா
அப்துல் கரீம் பங்குரா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவை எல்லாவற்றுக்கும் மேலாக English, Temne, Mende, Krio, Fula, Kono, Limba, Sherbro, Kiswahili, Spanish, Italian, French, Arabic, Hebrew, German என 18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார். இவருடைய சாதனைகளுக்காக உலகப்புகழ் அறிஞர் விருது, மத்திய அட்லாண்டிக் எழுத்தாளர்கள் சங்க விருது, டாப்ஸ் ஆஃப்ரிக்கன்-சென்டர்டு விருது, துபாய் இன்டர்நேஷனல் விருது என வீடு முழுக்க விருதுகளாக வாங்கி குவித்து வைத்திருக்கிறார் பங்குரா. இவரு எப்படித்தான் இம்புட்டையும் படிச்சு முடிச்சாரோ தெரியல. நினைக்கும் போது என் தலையெல்லாம் சுத்துது.

 

—  மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.