நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும் !

5

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.

Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.

Kauvery Cancer Institute App

Franchise மாடல் பிசினஸ்ல எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை. நாங்க என்ன நெனச்சோம்னா அவங்க கேட்கிற அந்த பணத்தை கொடுத்தால் அவங்களே மொத்தமா ரெடி பண்ணி நமக்கு கடையை கொடுத்துடுவாங்கன்னு நினைச்சோம்.

அதுக்காக அவங்க கேட்ட மூன்று லட்ச ரூபாய GST சேர்த்து கொடுத்தோம். இதுல என்ன கொடுமைன்னா இந்த கம்பெனி காரன் இருக்கிறது இந்தூர்ல.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவுங்கள நேர்ல போய் பார்த்துட்டு பிசினஸ், ப்ரோஸ்ஸ்ஸ் எல்லாம் தெரிஞ்சிட்டு அதுக்கு அப்புறம் யோசிச்சு பணம் கொடுப்போம் என்று தான் நாங்கள் நேர்ல போய் அவங்கள பார்த்தோம்.

தமிழ்நாட்டுல இருந்து நாங்க வந்ததும், நிறைய டிஷ்ஷஸ் செஞ்சு சாப்பிட கொடுத்தாங்க. டேஸ்ட் எல்லாம் பிரமாதமா இருந்தது.

பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும்

இங்க நீங்க என்ன டேஸ்ட்ல சாப்பிடுறீங்களோ அதே டேஸ்ட்ல தான் நம்ம அவுட்லெட்ல வர்ற கஸ்டமரும் சாப்பிடுவாங்கன்னு எங்க கிட்ட சொன்னாங்க.

அடுத்து அவங்க கேட்டா அமௌன்ட் மூன்று லட்சத்தை சென்னை வந்ததும் ரெண்டு தவணையா போட்டு விட்டோம்.

நாங்க போட்ட 3 லட்ச ரூபாய்க்கு ஒரு டீப் ஃப்ரீசர், பீட்சா ஓவன், ஒரு பிரிட்ஜ், மைக்ரோவேவ், இன்டக்ஷன் ஸ்டவ்ஸ் கொடுத்தாங்க. அதோட விலை மொத்ததுக்கே ஒரு லட்சத்துக்கு தான் வரும்.

நாங்க பணம் போட்டதும் அவங்க எங்களுக்கு மசாலா லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட் அனுப்புனாங்க.

அந்த லிஸ்ட்டோட மொத்த மதிப்பு 2 1/2 லட்சரூபாய். அத பாத்ததும் பெரிய ஷாக். அதான் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தாச்சே, எல்லாமே அதுலயே வராதான்னு கேட்டா, வராதுன்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் கொஞ்சம் பொருளை கம்மி பண்ண சொன்னோம்.

கொஞ்ச ஐட்டம்ஸ் ah கொறச்சி ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மாத்தி அனுப்புனாங்க.

அந்தப் பணத்தைக் கட்ட நகை பேங்குக்கு போச்சு.

அத போட்டு முடிச்சதும், கிச்சன் list ன்னு சொல்லி ஒரு லிஸ்ட் அனுப்புநாங்க.

அத எங்க ஊரிலேயே ஒரு கடை இருக்கு அங்க இருந்து வாங்கி அனுப்புறோம் இரண்டு லட்ச ரூபாய் போட்டு விடுங்க என்று சொன்னாங்க.

நாங்க முடியவே முடியாது அந்த லிஸ்ட்ட நாங்க இங்க லோக்கல்லையே வாங்கிக்கிறோம் அப்படின்னு சொல்லிட்டோம்.

அப்புறம் சென்னையில பாரீஸ்ல SSN பாத்திர கடையில போயி எல்லா ஐட்டமும் வாங்கிட்டோம். மொத்தம் ஒன்றரை லட்ச ரூபாய்ல முடிஞ்சது. ஒரு லட்சம் சேவ் பண்ணனோம்.

இதுக்கு நடுவுல அவன் கிட்ட நாங்க ஆர்டர் பண்ணுன மசாலா ஐட்டம்ஸ் எங்க அவுட்லைட்டுக்கு வந்து இறங்குச்சு.

அந்த பேக்கேஜ ஓபன் பண்ணி பார்த்தா, எல்லா மசாலாவையும் அவனுங்க வேற யார்கிட்டயோ வாங்கி, அதை இவனுங்க பேர்ல ரீ பேக்கிங் பண்ணி, எங்க தலையில கட்டி விட்டுட்டாங்க.

வெளிய ஒரு மசாலா ஐட்டம் 200 ரூ, ஆனா அவனுங்க எங்களுக்கு போட்ட பில்லு 700 ரூபா. கிட்டத்தட்ட ரெண்டரை மடங்குக்கு மேல லாபம்.

மசாலாக்கு நாங்க பே பண்ணுன இரண்டரை லட்சத்தை, நாங்கள் லோக்கல்ல வாங்கி இருந்தா ஒரு 60 ஆயிரத்துக்குள்ளேயே முடிஞ்சிருக்கும்.

ஆனா அது மாதிரி வாங்குனா உங்களுக்கு அந்த பிரான்சைஸ் மறுபடியும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

நீங்க கட்டுன ரெண்டு லட்ச ரூபா போயிடும்

அதுக்கு அப்புறம் ஒரு செஃப் குடுத்தான். அவனுக்கு நாங்க தான் ரூமு, மூணு வேளை சாப்பாடு அது போக சம்பளம்னு குடுத்தோம். செப்புக்கு மட்டும் மாசம் 40,000 பக்கம் செலவாச்சு.

கூட ஒரு ஹெல்பர். அவனுக்கு 25 ஆயிரம் பக்கம் செலவாச்சு.

கடை வாடகை 40 ஆயிரம், கரண்ட் பில் மாசம் பத்தாயிரம் குறையாமல் வரும்.

So, நாங்க கடையை திறக்கிறோமோ இல்லையோ மாசம் மாசம் எங்களோட செலவு 95 ஆயிரம் ரூபாய்.

இந்தத் 95 ஆயிரம் நாங்க செலவு பண்ணனும்னா, எங்களுக்கு மாசம் ரெண்டு லட்சம் ரூபாய்க்கு பிசினஸ் நடக்கணும்.

தோராயமா ஒரு நாளைக்கு 7 ஆயிரத்து 500 பக்கம் பிசினஸ் நடக்கணும். அதுக்கு மேல பிசினஸ் நடந்தா தான் எங்களுக்கு லாபமே வரும்.

நாங்க கடையை தொறந்த புதுசுல எங்களோட ஆவரேஜ் பிசினஸ் Value Rs 4000 ருபாய். அதுல லாபம் 2000 ரூபாய்.

மாச லாபம் மொத்தம் 60 ஆயிரம் ரூபாய்தான்.

இந்த 60 ஆயிரம் ரூபாய் லாபம், எங்களுக்கு செப் மற்றும் ஹெல்பருக்கு சம்பளம் கொடுக்கவே பத்தல. ஆனா கடையை நடத்தனுமே, அப்பதான் பிசினஸ் இன்க்ரீஸ் பண்ண முடியும்.

அதனால மறுபடியும் நகைகள் பேங்க்க்கு போச்சு.

இதுக்கு நடுவுல நமக்கு வேலைக்கு வந்து செப் முரட்டு குடிகாரன்.

தினமும் ஒரு குவாட்டர் அடிக்காம தூங்க மாட்டான். அது அவனோட பர்சனல், அதுல நாம தலையிடக்கூடாதுன்னு நாங்க அமைதியா இருந்தோம்.

திடீர்னு ஒரு நாள் குடிச்சிட்டு வேலைக்கு வந்துட்டான், வார்னிங் கொடுத்தோம்.

ஒரு இருபது நாள் கழிச்சு, கஸ்டமர் எல்லாம் டேபிளில் உட்கார்ந்து இருக்கும்போது, திடீர்னு வெளியே போயிட்டான். ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஃபுல் போதையில் வந்தான்.

கஸ்டமர் கிட்ட sorry கேட்டுட்டு, அவன ஊருக்கு போக சொல்லிட்டோம்.

இதுக்கு நடுவுல மசாலா ஐட்டம்ஸ் வேற அப்பப்ப தீர்ந்து போகும், அத பிரான்ஷியஸ் ல சொல்லி வாங்குவதற்கு பதிலா லோக்கல்லையே வாங்க ஆரம்பிச்சுட்டோம்.

அந்த விஷயம் செப் மூலமா பிரான்சிஸ்காரனுக்கு தெரிஞ்சு போச்சு.

பிரான்சைஸ் அக்ரிமெண்ட் படி, அடுத்த செப் பிரான்சிஸ் காரன் தான் கொடுக்கணும் .

அவன் கிட்ட ஃபாலோ பண்ணுனா, அவ மறுபடி நீங்க மசாலாக்கு ஆர்டர் பண்ணுங்க, ஒன்றரை லட்ச ரூபாய் கொடுங்கள் என்று டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

இது சரிப்பட்டு வராதுன்னு லோக்கல்லையே ஒரு செஃப் ரெடி பண்ணிட்டோம்.. பிறகு 4,5 மாசம் கழித்து கடையை close பண்ணிட்டோம். சரியா 8 லட்சம் lost.

உங்களுக்குcook தெரிஞ்ச பன்னுங்க . செப் வைத்து தான் பண்ண வேண்டியதா இருந்தால் தயவு செய்து பண்ணவேண்டாம்.

Murugesan N 

டிஜிட்டல் கிரியேட்டர் 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

5 Comments
  1. சிவம் says

    பதிவிற்கு நன்றி

  2. Sanjeevi says

    சக பிஸினசுகளும் இப்படித்தான் அதனால்தான் நம் பெரியோர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்று சொன்னாங்க. என்ன வியாபாரம் பண்ணினாலும் நமக்கு முழு அறிவும் , பயிற்சியும் ,அனுபவமும் தேவை.l

  3. Ganapathi says

    எந்த company franchise எடுத்தீங்க ஜி, சொன்னா இன்னொருத்தர் பாதிக்க பட மாட்டார்

  4. Vijay says

    உங்களது கசப்பான அனுபவங்கள் மற்றவர்க்கு பயன்படும் என்று பகிர்து கொண்டமைக்கு நன்றி. கூடிய விரைவில் நீங்கள் வேறொரு தொழிலில் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்.

  5. உஹடன் says

    இவர்கள் agreement ஐ ஒழுங்காக படித்து இருந்தாலே பாதி பிரச்சனை வந்து இருக்காது.
    Business model முழுவதும் தெரியாமல் இறங்கியது மிக பெரிய தவறு.
    Franchise model கள் பல MLM மாதிரி முரட்டு scam, அதை நாம் தான் நன்கு விச்சரிச்சு இறங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.