இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம் !
பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது தான் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது. அறிக்கையின்படி, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் ஹை ஹீல்ஸ் அணிவது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட அளவிலான ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற இங்கு விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசம் மற்றும் எளிதானது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். என்னதான் இங்கு அனுமதி கிடைத்தாலும் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இந்த கடற்கரையில் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த கடற்கரையின் நடைபாதைகள் மரங்களின் வேர்கள் நிறைந்து கடினமாக இருப்பதால் இது போன்ற விதிகளை விதித்துள்ளனர். இந்த நடைபாதையில் ஹை ஹீல்ஸ், ஷூ அணிந்தவர்கள் தடுமாறி விழுவதால் பல விபத்துகளைப் பயணிகள் அனுபவித்துள்ளனர். இதனைத் தடுக்கும் விதமாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் 1963ஆம் ஆண்டு இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.