கலையிழந்து – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டுபோட்டி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

கலையிழந்து வரும் ஜல்லிக்கட்டு – மெல்லமெல்ல வருவாய் துறை கட்டுபாட்டில் செல்லும் ஜல்லிக்கட்டு !

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாடாகும். அதில் ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு திமிலை பிடித்து மனிதர்கள் அடக்கும் விளையாட்டு சல்லிக்கட்டு ஆகும்.

தமிழ்நாட்டில் வேளாண்மை ஒரு முக்கியமான முதன்மையான தொழில் ஆகும்.  அறுவடைப் பண்டிகைக்காகவே பொங்கல் விழா தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதே நேரத்தில் வேளாண் குடி மக்கள் வளர்த்த கோழி, ஆடு, மாடு போன்றவற்றைக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். அதில் உருவானது தான் சேவல் சண்டை, கிடா சண்டை, சல்லி கட்டு ஆகும். இவை தமிழரின் வீரம், விவேகம், மண்ணின் பெருமையை உணர்த்துவதாகவே அமைந்தது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

தான் வளர்த்த நாட்டு மாடு இனக் காளைகளை கிராமங்களில் பொதுஇடங்களில் விட்டு மாடுபிடி வீரர்கள் அடக்குவதற்கு சல்லிக்கட்டு நடத்தினார்கள். முன்பு சல்லி நார்களால் கழுத்து கயிறும் மூக்கு கயிறும் கட்டப்பட்டதால் சல்லி கட்டு என்றனர்.  பின்பு சல்லிக்காசை கொம்பிக்கிடையில் கட்டப்பட்டு நடத்தப்பட்டது. பிறகு வேஷ்டி கொம்பில் கட்டப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

அப்பொழுது வீர விளையாட்டிற்கு விழா குழுவினர்  வெற்றிலை பாக்கு வைத்து மாடு அவிழ்த்து விட அழைப்பார்கள். ஊரே ஒன்று கூடி திருவிழா கொண்டாடி மகிழ்ந்தார்கள். நாளடைவில் இவ்விழாவில் கால்நடைகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தை நாடினர். மக்கள் போராட்டமும் அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணத்தினால் பல விதிமுறைகளுக்கு பிறகு சல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.

ஆனால் மரியாதையுடன் நடத்தப்பட்ட சல்லிக்கட்டு நாளடைவில் கார்ப்பரேட் நிறுவனம் நடத்தும் அளவில் சென்று விட்டது. ஏசி வாகனத்தில் காளைகள் வருவதும் தற்போது காணப்படுகிறது. ஊர் கூடி நடத்தும் விழா இன்று ஒரு காளையை அடக்க குழு குழுவாக இருந்து அடக்கும் விழாவாக சுருங்கி விட்டது .

சல்லி கட்டில் பல வகை உண்டு. ஏறுதழுவுதல் என்பது காளையின் திமிலை பிடித்தபடி பரிசு பெறும் நோக்கத்துடன் குறிப்பிட்ட தூரம் செல்வதாகும், வேலி விரட்டு என்பது எந்தவித எல்லையும் இல்லாமல் திறந்த வெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்குவதாகும். வடம் மஞ்சுவிரட்டு என்பது காளை ஐம்பது அடி நீளக்கயிற்றில் கட்டப்பட்டு மைதானத்தில் சுதந்திரமாக திறந்துவிடப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த மாட்டை அடக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்பொழுது வாடிவாசல் ஜல்லிக்கட்டு பெருமளவு பேசும் பொருளாகிவிட்டது அதில் குறுக்கு வாடிவாசல் அகண்ட வாடிவாசல் உள்ளது ஆனால் ஒரு ஜல்லிக்கட்டு விழாவில் குறைந்தது 700 முதல் 1000 காளைகளுக்கு டோக்கன் கொடுத்து விடுகிறார்கள் மாடு வளர்ப்போர் இதற்கென வாடகை வாகனம் பிடித்து காளைக்கு கழுத்து கயிறு மூக்கு கயிறு வாங்க அருவா உடன் நண்பர்கள் புடை சூழ பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விழாவில் பங்கேற்க வருகிறார்கள்.

விழா நடக்கும் இடத்தில் டோக்கன் பிரச்சனை பெரும் பிரச்சனை அது மட்டுமல்ல மாடுபிடி வீரர்களும் மாடு உரிமையாளர்களுக்கும் உண்ண உணவும் உறைவிடமும் கழிப்பிட வசதியும் போதுமான அளவு கிடையாது ஆனால் பல அரசியல் தலைவர்கள் மேடை ஏறி இன்று தங்க காசு கார் மோட்டார் சைக்கிள் அண்டா குண்டா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள் ஆனால் மாடுபிடி வீரர்கள் 25 நபர்கள் கொண்ட குழுவினராக களம் இறக்கப்படுகிறார்கள். மூன்று துள்ளல் வரை திமிலை பிடித்தாலோ குறிப்பிட்ட தூரம் திமிலை பிடித்து ஓடினாலோ மாடுபிடி வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றார்கள்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

இதில் போக்கு மாடு, சுத்து மாடு அவற்றின் குணத்திற்கேற்ப களத்தில் விளையாடும். இதில் பல வளர்ப்பு காளைகளுக்கு காதுகள் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றன. கொம்புகள் சீவப்படுகின்றன. கட்டுத் தரையில் வளர்ந்த காளைகள் தசைபிடிப்புடன் வனப்பான இருக்கும். பட்டி மாடு சிறிய திமிலுடன்  இருக்கும்.

ஆனால் தமிழரின் வீரமானது எவ்வித கட்டுப்பாடும் இன்றி நொடிப் பொழுதில் அடக்குவதாகும் ஒரு காளைக்கு 25 காளையர்கள் களத்தில் இருந்து காலை வரும் பொழுது உரிமையாளர் துண்டையாட்டி  சல்லிக்கட்டு நடைபெறுகிறது. காலை வளர்ப்பவர்களுக்கு ஆன்லைன் பதிவு என்று சொல்லப்படுகிறது.

ஆனால் பலர் காளையை வளர்க்க தெரிந்த அளவிற்கு கணினியை கையாளத் தெரியவில்லை என்பது உச்சகட்ட சோகமான நிகழ்வு ஆகும் அரசு அலுவலர்கள் ஒருவன் ஆண்டு முழுவதும் தான் வளர்க்கும் காளைக்கு தவிடு பருத்திக்கொட்டை புண்ணாக்கு என உணவு அளித்து வாடிவாசல் அழைத்துவரும் சில நிமிட நிகழ்விற்காக ஆண்டுதோறும் அரும்பாடு பட்டு வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஆனால் சல்லிக்கட்டு நிகழ்வில் மாடு வளர்ப்போர்க்கும் மாடுபிடி வீரர்க்கும் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை காலையா காலையறா என களம் கண்டு வரும் தமிழர்கள் வீர மரபு காக்க வேண்டும் என்பதே சல்லிக்கட்டு வீரர்களின் கோரிக்கையாக இருக்கின்றது மேலும் உயிரை துச்சம் என மதித்து களம் காணும் வீரர் வெற்றி பெற்றால் அண்டாவை தூக்கி எறியும் போக்கும் கைவிடப்பட வேண்டும் பிற விளையாட்டு போல் தரம் உயர்த்தி தமிழர் மானம் மரியாதை மண்ணில் பெருமையையும் பறைசாற்ற வேண்டும் என்கின்ற அவர்கள் காளையர்கள்.

ஜல்லிக்கட்டு மக்கள் கூட்டம்
ஜல்லிக்கட்டு மக்கள் கூட்டம்

இவ்வருடம் பாலமேட்டிலும், அலங்காநல்லூரிலும் பார்வையாளர்களுக்கு தனியிடம் ஒத்துக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் பெரியவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை இவ்வருடம் வழங்கப்படுவதில்லை. மேலும் மாடுகள் அவிழக்க அரசு ஆன்லைன் மூலம் கொண்டுவந்ததால் பல திறமையான மாடுகளைக் கொண்டுள்ள உரிமையாளர்களுக்கு இதனைப் பற்றி தகவல்கள் தெரியாததால் அவர்கள் வருடம் முழுவதும் செலவு செய்து பிள்ளை போல வளர்த்து அரங்கேற்ற முடியாமல் தவிப்பது பார்க்கும் உள்ளூர் மக்கள் எங்களுக்கே கண் கலங்க வைக்குது. சென்ற வருடத்தைக் காட்டிலும் அரசின் தலையீடு அதிகம் உள்ளதால் உள்ளூர் கமிட்டியாளர்களிடமும் சென்ற முறையிட முடியல….

உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு 2007 முதல் கலையிழந்து மெல்ல மெல்ல அப்படியே வருவாய் துறை வசம் இவ்வீர விளையாட்டு செல்கிறது. என்று சோகத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அலங்காநல்லூர், பாலமேட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்… .

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.