நகை கடையில் கைவரிசை காட்டிய 60 வயது பெண் !
விருதுநகர் நகர் பகுதியில் தபால் நிலையம் அருகே பல வருடங்களாக கவரிங் நகை கடை நடத்தி வரும் ஷேக் ஃபாரிட் சம்பவத்தின் போது,
கடைக்கு பொருட்கள் வாங்க குழுவாக வந்த பெண்களில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் கவரிங் நகை வாங்குவது போல், அனைத்து மாடல் நகைகளையும் மேலே எடுத்து வைக்க சொல்லிவிட்டு பணியில் இருந்த பெண்ணின் கவனத்தை திசை திருப்பிவிட்டு மேஜையின் மேலே இருந்த கவரிங் செயின்கள் மற்றும் சில பொருட்களை திருடி தான் கொண்டு வந்த கைப்பைக்குள் மறைத்து வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் கூறியதாவது இந்த திருட்டு சம்பவத்தில் ரூ.3000 மதிப்பிலான பொருட்களை அந்த பெண்மணி திருடிவிட்டதாகவும், சாதாரண கவரிங் நகை என்பதால் இது சம்பந்தமாக நான் புகார் அளிக்கவில்லை எனவும், எனக்கு இழப்பு ஏற்பட்டது சிறிதளவு என்றாலும் இந்த பெண்மணி வேறு எந்த கடைகளிலும் இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் மற்ற வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிசிடிவி காட்சியை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்