கை நிறைய சம்பளமும் படிப்பும் ! 3000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு ! ஏப்-30 கடைசி !
கை நிறைய சம்பளமும் படிப்பும் ! 3000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு !
கரும்புத்தின்ன கூலி கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் கைநிறைய சம்பளத்துடன் மேற்கொண்டு படிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அட்டகாசமான வாய்ப்புதான் இது.
இந்தியாவின் முன்னோடி தொண்டுநிறுவனமான அரவிந்த் பவுண்டேஷன் மற்றும் விஷ்வ யுவகேந்திராவின் கூட்டு முயற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.இல் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இயங்கிவரும் உலகத்தரம்வாய்ந்த தோல் அல்லாத காலணி உற்பத்தி பிரிவான ஆஸ்பயர் காலணி தொழிற்சாலைக்காக, தமிழகம் முழுவதிலிமிருந்தும் 3000 பெண்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யவிருக்கிறார்கள். பி.எஃப்., இ.எஸ்.ஐ. உரிமைகளுடன் மூன்று வேளை உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதியுடன், விடுதியிலிருந்து தொழிற்சாலைக்கு செல்ல பேருந்து வசதியுடன் மாதந்தோறும் ரூ16,375/- சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இவர்கள் அங்கே பணிபுரிந்துகொண்டே, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறந்தவெளி பள்ளி மூலம் 12 ஆம் வகுப்பும்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறந்தவெளி பல்கலை மூலம் கல்லூரி படிப்பையும் தொடர்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
இதுமட்டுமின்றி, தமிழக அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கும் இங்கிருந்தபடியே தயாராகலாம். அதற்கு தேவையான அனைத்து கல்வி சார் உதவிகளையும் வழங்குகிறார்கள். இதுதவிர, தனிப்பட்ட விருப்பங்களான விளையாட்டு, யோகா மற்றும் தியான பயிற்சிகளையும் வழங்குகிறார்கள்.
இந்த வேலைவாய்புக்கான இறுதி வாய்ப்பு ஏப்ரல்-30 வரை மட்டுமே. எப்படி விண்ணப்பிப்பது? எங்கே நேர்காணல்? என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு அழைக்க : 9443858511










Comments are closed, but trackbacks and pingbacks are open.