1990-ல் தந்தை வாங்கிய பங்கு ஆவணம் ! ஆச்சரியத்தில் உறைந்த மகன்!
நம் பெரியவர்கள் நமக்காக ஒரு பொருளை இந்த உலகில் விட்டுச் சென்றால் அதற்கு ஒரு காரணம் இல்லாமல் விட்டுச் செல்ல மாட்டார்கள். இதைப் போல் தான் நான் சொல்லப் போறவரின் தந்தையும் அவருக்காக மிகப்பெரிய பரிசை இவ்வுலகில் விட்டு சென்று இருக்கிறார். அது தான் 1990-களில் அவரின் தந்தை வெறும் 1 லட்சத்திற்கு வாங்கிய பழைய JSW ஸ்டீல் பங்குகள் தொடர்பான ஒரு ஆவணம். நீங்கள் கேட்கலாம் அது வெறும் ஆவணம் தானே அதில் என்ன இருக்கிறது என்று ஆனால் தற்போது அதன் மதிப்பை கேட்டீர்கள் என்றால் நீங்களே வாயடைத்து போய்விடுவீர்கள்.
இது குறித்து முதலீட்டாளர் சவுரவ் தத்தா என்பவர், தனது தந்தையிடமிருந்து JSW ஸ்டீல் பங்குகளை பெற்றது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 1990களில் அவரின் தந்தை ₹1 லட்சத்திற்கு வாங்கிய JSW பங்குகளைக் கண்டுபிடித்தார். இன்று அது ₹80 கோடி மதிப்புடையது ” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது 1990 இல் ஒரு லட்சத்திற்கு JSW ஸ்டீல் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பழைய பங்கு சான்றிதழை கண்டுபிடித்த போது அந்த பயனரின் வாழ்க்கையே மாறும் என்று அவர் நினைத்திருக்கமாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த JSW ஸ்டீல் என்பது இந்தியாவில் முன்னணி எஃகு உற்பத்தியாளராக உள்ளது. JSW ஸ்டீல் லிமிடெட், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலைகளில் எஃகு தயாரிப்பு செய்கிறது. தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் பங்கு விலை சுமார் ரூ.1004.90 ஆக உள்ளது. மேலும் இதன் சந்தை மூலதனம் ரூ.2.37 டிரில்லியன் ஆகும். JSW ஸ்டீலின் பங்குகள் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.