வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரம் – நீதிபதி அரிபரந்தாமன் அதிரடி !
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வேண்டும் – நீதியரசர் அரி பரந்தாமன்…
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ..
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர்சுவாமிநாதன் குறித்து புகார்தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளநிலையில், நீதிபதி சுவாமிநாதன்வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். தற்போது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் மதுரை கேகே நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் நீதி அரசர்ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் ஹென்றி திபேன், பி.யூ.சி.எல். பேராசிரியர் முரளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
பிறகு செய்தியாளர்களை சந்தித்த து அரி பரந்தாமன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதுஇது தனிப்பட்ட வாஞ்சிநாதனுக்கான பிரச்சனை அல்ல இது ஒட்டுமொத்த சாதாரண ஒவ்வொரு மனிதருக்குமான பிரச்சனை. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய புகார் மனு, யாரோ ஒருவர் மூலமாக சமூக வலைதளத்தில் வெளியானால் அதற்கு புகார் கொடுத்த நபர் எப்படி பொறுப்பாக முடியும். ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
சுவாமி நாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது பாலியல் தொடர்பான வழக்கில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குகாய், அதற்குரிய வழக்கு ஒன்றில் அவரே அமர்வு நீதிபதியாக இருந்த போது நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. அது போன்ற தவறை நீதிபதி சுவாமிநாதன் செய்யக்கூடாது. அவ்வாறு அவர் செய்தால் தலைமை நீதிபதி தலையீடு செய்து இதனை தடுக்க வேண்டும்.
இந்த அநீதிக்கு துணை போகக்கூடாது. திங்களன்று வரக்கூடிய இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி சுவாமி நாதனே கைவிட வேண்டும் அல்லது தலைமை நீதிபதி தலையிட்டு இதனை ரத்து செய்ய வேண்டும் இதுதான் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் நோக்கம்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு விஷயம் சார்ந்து முன்னோடியான போராட்டங்களை மேற்கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் தான் அதேபோன்று நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி போராடியதும் தமிழ்நாடு தான். குறிப்பிட்ட விஷயத்தில் வாஞ்சிநாதன் பின்வாங்கினால் கூட வழக்கறிஞர்கள் இதனை விடுவதாக இல்லை என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கண்காணிப்பகம், பி யு சி எல் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விவகாரத்தில் நீதி கிடைக்க முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.