அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !

திருச்சியில் அடகு நகையை விற்க

விருதுநகர், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி திருத்தங்கள் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையிலானது. இதில் மாநகர, ஒன்றிய, நகர பகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கூட்டத்தில் பேசுகையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மக்கள் மத்தியில் தினசரி பணி செய்ய வேண்டும். கட்சிப் பணியை அலட்சியமாக பார்க்கும் தன்மை யாரிடமும் இருக்கக்கூடாது. பணி செய்ய முடியாவிட்டால், கட்சிப் பொறுப்பிலிருந்து ஒதுங்கி விடுங்கள்; வெளியே ஆயிரக்கணக்கான நம்பிக்கையுடையவர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்,” என்றார்.

https://www.livyashree.com/

“வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அனைவரும் ஒருமித்து உழைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமம், வட்டாரத்திலும் மக்கள் பிரச்சனைகளை நேரில் அறிந்து தீர்க்க முயலுங்கள். மக்கள் நம்பிக்கையே அதிமுகவின் பலம்,” எனக் குறிப்பிட்டார்.

—   மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.