குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா – உள்ளூர் விடுமுறை
குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா – உள்ளூர் விடுமுறை – குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதால் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு.
கரூர் மாவட்டம், குளித்தலை அருள்மிகு முற்றிலாமுலையம்மை உடனமர் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் உபயதாரர்கள் சார்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நாளை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் அனைத்து விமான கோபுரங்களுக்கும், அதைத்தொடர்ந்து காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அருள்மிகு முற்றிலாமுலையம்மை உடனமர் அருள்மிகு கடம்பவனேஸ்வரர் சுவாமிக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு குளித்தலை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வருகிற 27 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
– நௌஷாத்,