அங்குசம் சேனலில் இணைய

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்! ஆன்மீகப் பயணம் தொடர் 10

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இத்திருக்கோயில் சேலம் – நாமக்கல் எல்லைப் பகுதியில் திருச்செங்கோடு வட்டம் காளிப்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் தென்றல் தவழும் பசுமை போர்த்திய வயல்வெளிகள் அமைதியான சூழல் மற்றும் ஓங்கி உயர்ந்த மலைகள் நிறைந்த பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இந்த முருகன் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் முருக பக்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் ஆண்டுதோறும் தைப்பூச திருநாளை ஒட்டி கடும் விரதம் இருந்து காடு மேடுகளை தாண்டி விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாது பாதயாத்திரை ஆக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்
கந்தசாமி  திருக்கோயில்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அதன்படி, குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல் நிலையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான் இனி,  “நீ என்னை காண பழனிக்கு வர தேவையில்லை” உனது இடத்திலேயே நான் குடியிருக்க விரும்புகிறேன். ஆகவே, எனக்கு இங்கே ஒரு கோவில் எழுப்பு என்று அருள் கூறி மறைந்து விட்டார். அதன்படி, கட்டப்பட்டது தான் இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் எனப்படுகிறது. இக்கோவில் ஆலயம் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோவிலின் நுழைவு வாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. ஆலயத்தின் மூலவராக கந்தசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கோவிலின் வெளியே வடக்கு பகுதியில் இடும்பன் சன்னதி உள்ளது.

கந்தசாமி திருக்கோயில்
கந்தசாமி திருக்கோயில்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதை தொடர்ந்து விநாயகர் சன்னதி காணப்படுகிறது. சனீஸ்வரர், வேலாயுத சாமி, உப சன்னதிகளும் உள்ளன. இங்கே, முருகன் சன்னதியில் விபூதிக்கு பதிலாக கரும்பு சக்கைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பல் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இச்சாம்பலை பக்தர்கள் அருமருந்து என்றே அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இருக்கும் இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே மனம் உவந்து வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள் தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும் நடப்பாண்டு பிரசாத திருநீறு நாங்கள் கொண்டு வந்து தருகிறோம் எனக் கூறி ஓராண்டுக்கு முன் வாக்களித்து கொண்டு வந்து தருவார்களாம்! அதன்படி, விரதம் இருந்து கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை மூலவர் முன்வைத்து சிறப்பு பூஜை செய்து வேறு எந்த கலப்பும் செய்யாமல் அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

மனம் எதுவும் இல்லாத இந்த சாம்பல் பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குடும்பத்தில் சிக்கல் வியாபாரத்தில் நஷ்டம் தேவையில்லாத அச்சம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட கூடியவர்கள் இங்குள்ள காளிப்பட்டி கந்தசாமியை பிரார்த்தனை செய்து கோவிலில் இருக்கும் இடும்பன் சன்னதியில் கொடுக்கப்படும் மை பிரசாதத்தை பெற்று தினமும் நெற்றியில் வைத்து

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

காளிப்பட்டி
காளிப்பட்டி

வழிபட்டால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அகலும் என்றும் தேவையில்லாத பயம் விலகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் இடும்பன் சன்னதியில் தயாரித்துக் கொடுக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த மையினால் விடுபட்டு உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேரோட்டமும் நடைபெறும் அந்த திருவிழாவில் திரும்பிய திசை எல்லாம் காவடியாட்டம் , உருளுதண்டனம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம் என்று தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பக்தி பரவசத்துடன் கலை கட்டுகிறது. இந்த கோவிலில் வைகாசி விசாக நாளில் உற்சவர் வீதிஉலா நடைபெறும் அப்போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலைகள் முழுவதுமாக நீங்கி விடுகிறது என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவிலில் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

தைப்பூச விழா
தைப்பூச விழா

மேலும், தைப்பூச விழாவில் சிறப்பு தீர்ப்புகளும் கூறப்படுகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள் மற்றும் இடங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது. அது போல், இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவிலும் நடந்திருக்கிறது அந்த சிறப்பு நீதிமன்றம் இப்பொழுதும் திருவிழா காலங்களில் நடக்கும் நான்கு நாட்களும் தொன்றுதொட்டு கோவில் வளாகத்தில் நடத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள். மேலும், அதில் பல்வேறு குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்ப்பும் வழங்கப்படுகிறது. அத்தோடு சேர்த்து காலம் காலமாக கோவில் வளாகத்தின் எதிரில் மாட்டுச் சந்தைகள் நடைபெறுவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.

 

 –   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.