கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ்….. சாராய அரக்கர்களின் பிடியில் வட மாவட்டங்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ் … கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட  193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்துள்ளனர் ,  60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 70 க்கும்  மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

கல்வராயன் மலை
கல்வராயன் மலை

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலை, கள்ளக்குறிச்சியின் கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டதாக பலமுறை  வன காவலர்கள் ரோந்து செல்லும்போது சாராய ஊறல்களை அழித்திவிட்டுதான் வருவார்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அதே வன பகுதிகளில் மீண்டும் ஊறல் போடுவது துவங்கி விடும். இம்மாதிரியான பிரச்சனைகளை திருவண்ணாமலை, திருப்பத்தூர்,  வேலூர் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் அதிகம்.

கள்ளச்சாராயம்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள சயனகுண்டா, மோர்தானா, பேர்ணாம்பட்டு சரகத்தில் உள்ள பாய்மலை, அரவட்லா, மீனூர் மலை பகுதி, ஒடுக்கத்தூர் சரகத்தில் உள்ள அல்லேரி மலை கிராமம், அமிர்தி சரகத்தில் உள்ள நெக்கினி, கூறானூர், கோலயம், வாணியம்பாடி பகுதியில் உள்ள மாதகடப்பா, திருப்பத்தூர் சரகத்தில் உள்ள சேர்க்கனூர், சிங்காரப்பேட்டை, நெல்லிப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமரதூர்  போன்ற பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் , கடந்த ஆறு மாதங்களில்   வேலூர், திருவண்ணாமலை, , மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீர் சோதனை நடத்தி பல ஆயிரம் லிட்டர் சாராயத்தை அளித்துள்ளோம்.

கல்வராயன் மலை
கல்வராயன் மலை

வேலூர் மண்டல வன கோட்டத்தில் ஒன்பது இடங்களில் இம்மாதிரியான ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு 1,470 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. அதே போல திருப்பத்தூர் வன கோட்டத்தில் 17 இடங்களில்  ஊரல்களிலிருந்த 7,760 லிட்டர் சாராயமும் அழிக்கப்பட்டது. திருவண்ணாமலை வன கோட்டத்தில் 11 இடங்களில்  கண்டுபிடிக்கப்பட்ட 6,950 லிட்டர் சாராயம் அளித்தோம் என்றார் ஒரு வனத்துறை அதிகாரி.

கள்ள போலீஸ்

சாராய ஊறல்கள் போட மூன்று  முக்கிய பொருட்கள் தேவை – ஒன்று நல்ல தண்ணீர், இரண்டாவது அடுப்பு எரியூட்ட விறகு.  மூன்றாவது  சாரமர பட்டைகள். இவை மூன்றும் வனப்பகுதிகளில் மிக எளிதாக கிடைப்பதால்தான் சாராய ஊறல்கள் வன பகுதிகளுக்குள் போடப்படுகின்றன.

இந்த மாதிரி ஊறல்களை அழித்த பின் அது குறித்த தகவல்களை உள்ளூர் காவல் துறை அதிகாரிகளிடமும் , கலால் துறை அதிகாரிகளிடமும் தெரிவித்து விடுவோம்.  இருந்தும் இந்த ஊறல்கள் மீண்டும் போடப்பட்டு சாராயம் காய்ச்சும் தொழில் மீண்டும் தொடரும். பல இடங்களில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளும், கலால் துறை அதிகாரிகளும் காய்ச்சுபவர்களுக்கு உடந்தையாக செயல்படுவது கண்கூடு, உள்ளூர் போலீஸ் மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதியளித்துவிட்டு , வனத்துறை அதிகாரிகள் மீது பழி போடுகிறார்கள் எங்கள் டிபார்ட்மெண்ட்டிலும் கருப்பு ஆடு இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களையும் மீறி நடவடிக்கை எடுப்போம்.

ஜவ்வாதுமலை
ஜவ்வாதுமலை

பொதுவாகவே மலை கிராமங்கள் தான் சாராயம் காய்ச்சுபவர்களின் குறியாக இருக்கும் ஏனெனில் இந்த கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் இருக்காது. மேலும் இங்குள்ள ஏழை மக்களால் டாஸ்மாக் மதுபானங்களை  வாங்கி குடிக்கும் அளவுக்கு வசதியானவர்கள் கிடையாது , டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் வாங்க முடியாத பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் இவர்கள், இதுபோன்ற கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்லும் காரணத்தினாலே  கள்ளச்சாராய வியாபாரிகள் தங்கள் சாராய ஆலைகளை வன  பகுதிகளில் விரித்து கல்லா கட்டுகிறார்கள் என்றார்  ஒரு முன்னாள் வனத்துறை அதிகாரி.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மதகடப்பா , கோரி பள்ளத்தில் சாராயத்தை அழித்த மதுவிலக்கு போலீசார்
மதகடப்பா , கோரி பள்ளத்தில் சாராயத்தை அழித்த மதுவிலக்கு போலீசார்

சாராய அரக்கர்களின் பிடியில் வட மாவட்டங்கள்?

திருப்பத்தூர் , வேலூர்,  கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை  மாவட்டங்களில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மிக குறைவு.
இங்கு  வசிக்கும் அதிகளவிலான மக்கள் விவசாய தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் உள்ளனர். விவசாய கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, பெயிண்டிங் பிளம்பிங், கொத்தனார், சித்தாள், காவலாளி போன்ற வேலைகளைதான்  இவர்கள் பார்க்கின்றனர் , போதுமான வேலைவாய்ப்புகளும் படிப்பறிவும் , விழிப்புணர்வும் , மிக குறைவு இதனாலே பல இளைஞர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.

அதில் ஒன்று சாராயம் காய்ச்ச செல்வது மற்றொன்று ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மர கட்டைகளை வெட்டி கடத்தும் தொழிலுக்கு செல்வது , இந்த இரண்டு தொழில்களிலும் குறைந்த காலத்திலேயே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம் அரசியல் வாதிகள், மற்றும் போலீஸ் மனது வைத்தால் மட்டுமே முழுமையாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் , என்கிறார் ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சன்முகம்

குண்டர் சட்டத்தில் மூவர்
குண்டர் சட்டத்தில் மூவர்

உள்ளூர் போலீஸ் நடத்திய சாராய வேட்டை

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது அதில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த முள்ளுவாடி கிராமத்தில் வேப்பங்குப்பம் , ஓடை பகுதி அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பலை வேப்பங்குப்பம்  போலீஸ்  வேட்டையில்  முட்புதர்க்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 1100 லிட்டர் கள்ள சாராய ஊறலை  அழித்து  சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மூல பொருட்களையும் தீயிட்டு அழித்துள்ளனர்.

அதேபோல் , தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான வாணியம்பாடி அடுத்த கொரிப்பள்ளம் மலைப்பகுதியில் மறைவான இடத்தில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலும் இப்பகுதிக்குட்பட்ட தேவராஜபுரத்தில்   காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல்களையும், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும் மூலப்பொருட்களையும் அழிக்கப்பட்டது.  ஆம்பூர் தோப்பலகுண்டா- புளியந்தோப்பு பகுதியில் சிவசங்கரன் என்பவரின் தோட்டத்தில் கஞ்சா பயிர்களை அழித்துள்ளனர் மதுவிலக்கு போலீசார் மற்றும் திம்மாம்பேட்டை காவல்துறையினர்.

தொப்பலகுண்டா பகுதியில் கஞ்சா பயிர்கள் மற்றும் சாராய ஊறல் அழித்த திம்மாம்பேட்டை போலீஸ்
தொப்பலகுண்டா பகுதியில் கஞ்சா பயிர்கள் மற்றும் சாராய ஊறல் அழித்த திம்மாம்பேட்டை போலீஸ்

குண்டர் சட்டத்தில் மூவர்

வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, கந்திலி, ஆலங்காயம், திருப்பத்தூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மது மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்றதாக விக்னேஷ், குமுதா, சங்கர், ரமேஷ், சுமதி, சேகர், மாதப்பன், செல்வி, உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

அவர்களில்  , கந்திலி வட்டம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி  சின்னதம்பி , கோரிப்பள்ளம்  முருகன் , மற்றும் நாட்றம்பள்ளி  வேடி வட்டத்தை சேர்ந்த மாசிலாமணி  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு பிரிவு  சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கா. மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.