காமராஜர் வேடமணிந்து ஊர்வலம் சென்ற பள்ளி மாணவர்கள் !
பெருந்தலைவர் காமராஜர் 123வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலை பள்ளி மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் செக்கடி தெரு, மெயின் ரோடு வழியாக காமராஜர் சிலையை சென்றடைந்தது.
இதனை தொடர்ந்து காமராஜர் வேடமணிந்த மாணவர்கள் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் ஊர்வலமாக வந்த குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதே போல கோவில்பட்டி 14வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தவமணி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
— மணிபாரதி